விபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாய் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்


0
1 share

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ஓர் இரும்புக் கடையில் சகோதரர்கள் இருவரான பாலாஜி, முரளி பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் மாதம் ஒரு முறை ஒவ்வோர் ஊராகச் சென்று தாங்கள் பணியாற்றும் கடைக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று தாங்கள் வசூலித்த தொகையான 69 லட்சத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். காஞ்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அவர்கள் வந்த காரின் சக்கரம் வெடித்து வாகனம் விபத்துக்குள்ளானது.

காரில் வந்த முரளி அதிக ரத்தப்போக்கின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் வாகனத்தை ஓட்டிய சரவணனும் முரளியின் சகோதரரான பாலாஜியும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்ததை தொடர்ந்து அதிலிருந்த தொழில்நுட்பப் பணியாளர் விஜயகுமாரும் ஓட்டுனர் சந்தானமும் காயமடைந்தவர்களுக்கு முதலுதவிகள் அளித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் விபத்தின் காரணமாக காரில் சிதறிக் கிடந்த 69 லட்சம் ரூபாய் பணத்தையும் சேகரித்து பத்திரப்படுத்தி உரியவர்களிடம் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த உலகில் வாழும் பலர் மனிதநேயத்தை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். எதிர்பாராத விதமாக யாரேனும் விபத்தில் சிக்கும் போது கூட அவர்களை காப்பாற்றாமல் அந்த தருணத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து பணத்தையும் உடமைகளையும் பறித்து செல்லும் இரத்தமற்ற மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இரக்கமற்ற மனிதர்களுக்கு மத்தியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதோடு அவர்கள் வைத்திருந்த 69 லட்ச ரூபாய் பணத்தையும் பத்திரப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format