18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் பாதை


இன்றைய தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பது டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தான்.

எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற கோரி ஆளுனரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தன் பெரும்பான்மை பலத்தை அ.தி.மு.க. நிறுபித்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பொறுப்பேற்றார். பின், 2016 செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். இதனையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்-க்கும் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கும் மோதல் மூண்டது.

பின் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக 2017 பிப்ரவரியில் சசிகலா பொறுப்பேற்றதை தொடர்ந்து தன் முதல்வர் பதவியை இராஜினாமா செய்த ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்திற்கு எதிராக தனி அணியாக பிரிந்தார்.

பின் கூவத்துரில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்துவைக்கப்படது, சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக சசிகலா பெங்களூர் சிறையில் அடைத்தது, அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றது என பல அரசியல் திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

இந்நிலையில் ஓ.பி.எஸ். அணி மற்றும். ஈ.பி.எஸ். அணி ஒன்றினைந்து சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை ஒதுக்க வலியுறுத்தினர். இதன் விளைவாக ஆகஸ்ட் 21, 2017 அன்று ஓ.பி.எஸ். அணி மற்றும். ஈ.பி.எஸ். அணி ஆளுநர் முன்னிலையில் இனைந்ததோடு ஓ.பி.எஸ். துணை முதல்வராகவும் ஆனார்.

இதனை விரும்பாத டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்து ஈ.பி.எஸ். மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்தனர்.

அரசின் மீது புகார் அளித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜக்கையன் தன் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டதை அடுத்து மீதமுள்ள 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.

இந்த உத்தரவை எதிர்த்து திரு. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரனைகளுக்கு பிறகு நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதன் விளைவாக நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணணை நியமித்தது. இந்நிலையில் மூன்றாம் நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: News

DON'T MISS