கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் : காமராஜர் பற்றிய 20 தகவல்கள்


0
2 shares

தமிழகத்தில் கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று. படிக்காத மேதை காமராஜரின் ஆட்சியில் தான் தமிழகத்தில் மிகப்பெரும் கல்வி புரட்சியே உருவானது. இந்த மாமனிதர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ:

1. காமராஜரின் ஞாபக சக்தி குறித்து பலரும் வியந்ததுண்டு. அவர் ஒருவரை ஒரு முறை பார்த்து பேசி விட்டால் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் மிகச் சரியாக நினைவுபடுத்தி கூறுவார்.

2. காமராஜர் தன் பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது தோளில் துண்டு போட்டுக்கொண்டார். அன்று முதல் தன் தோளில் துண்டு போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

3. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் ‘பால மந்திர்’ ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

4. 1966-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர் “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்” என கூறினார். இந்த உரை தான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

5. தமிழகத்தில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என கூறும் அளவுக்கு எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார் காமராஜர்.

6. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முன்வந்து முதன்முதலாக 1963-ம் ஆண்டு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

7. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத் தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என அவர் அடிக்கடி கூறுவார்.

8. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் தயங்க மாட்டார். மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

9. முதல்வராக இருந்த போதும் காமராஜர் எளிமையான வாழ்க்கையே வாழ விரும்பினார். “எனக்கு தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை” என்று நேருவே குறிப்பிடும் அளவுக்கு காமராஜர் எளிமையாக வாழ்ந்தார்.

10. காமராஜர் நாளிதழ்கள் படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை கவனித்து பின் அந்த ஊர்களுக்கு செல்லும் போது அந்த பிரச்சினை குறித்து மக்களுடன் விவாதிப்பார்.

11. காமராஜர் மக்களுடன் பேசுவதை பெரிதும் விரும்புவார். தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்கச் செல்வார். பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் அவர்களுக்கு பேசி புரிய வைப்பார்.

12. 1953-ம் ஆண்டு நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

13. காமராஜர் இளம் வயதில் சிறிது காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்தார்.

14. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டுமே இருந்த நிலையில் ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்களை பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்தார்.

15. காமராஜரின் ஆட்சியில் தமிழகத்தில் சுமார் 33,000 ஏரி, குளங்கள் சீர்படுத்தப்பட்டது.

16. படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜர் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 3000-க்கும் அதிகமான பள்ளிகளை திறந்து வைத்தார்.

17. காமராஜரின் இலவச மதிய உணவு திட்டத்தால் பல பெற்றோர்கள் தன் பிள்ளையாவது பசி இல்லாமல் இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பினர். இதன் மூலம் 7% இருந்த கற்போரின் எண்ணிக்கை 37% ஆனது. அதாவது 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் கல்வி கற்றனர்.

18. கல்வி மட்டுமின்றி பல புது புது தொழிற்சாலைகளை நிறுவி ஏழை எளிய மக்களின் பசி பஞ்சம் போக்க வழி வகை செய்தார்.

19. காமராஜர் ஆட்சியில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது. விவசாயத்திற்காக மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

20. இலவச மதிய உணவு திட்டம், இலவச புத்தகம், சீருடை திட்டம், நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்களாக விளங்குகிறது.

காமராஜர் தனது 9 ஆண்டு கால பொற்கால ஆட்சியில் செய்த சாதனைகள் இன்றளவும் பேசப்படுகிறது. தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்தவர் நம் பெருந்தலைவர் காமராஜர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத் தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக் கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்ததோடு அவருக்காக அவர் சேர்த்து வைத்தது சொத்துக்கள் கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்க முடியாது.


Like it? Share with your friends!

0
2 shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
1
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format