பணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 ஆண்டுகள் நிறைவு : நடவடிக்கையால் நடுத்தர மக்கள் பெற்ற பலன்?

183 Views
By bhuwaneshwaran-g | November 8, 2019

கடந்த 2016-ம் ஆண்டில் இதே நாளில் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் நிச்சயம் ஒழிக்கப்படும் என்றும் கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இதனால் இந்திய பொருளாதாரம் உயர்த்தப்படும் என்றும் நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்த திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கு மேல் பொது மக்கள் பணமின்றி தவித்தனர். அதுமட்டுமின்றி ஏ.டி.எம். வாசலில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர், இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதுவரை வங்கிகளுக்கு ரூ.15.31 லட்சம் கோடி பணம் வந்துள்ளதாகவும் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை எனவும் தெரிவித்தது

இந்த திட்டத்தால் நடுத்தர மக்களும் சிறுதொழில் செய்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தை பற்றி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி. கிருஷ்ணன் இந்த திட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது எனவும் இந்த திட்டத்தால் பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் தான் பலனை பெற்றது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த திட்டம் குறித்து இன்று வரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காட்டமாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “பண மதிப்பிழப்பு எனும் தீவிரவாத நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசத்தின் பொருளாதாரம் சீரழிந்தது. ஏராளமான மக்களின் உயிரை எடுத்தது. லட்சக்கணக்கான சிறுதொழில்களை அழித்து, லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்தது. தீய நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் இன்னும் நிறுத்தப்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

WHATS YOUR REACTION?

0
1
0
0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

Happy birthday Ashwin Saravanan : 7 facts about this promising director

By Salesh Dipak | November 22, 2019
Read more

kollywood, awesome spotlight

5 years of Naaigal Jaakirathai : 7 facts about this thriller film

By Salesh Dipak | November 22, 2019
Read more

News

Vellore 11th Grade Student uses Hydrogen for petrol : Plan to display at the National design and research forum

By Jegan Ravichandran | November 22, 2019
Read more

Trending

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

Happy birthday Shalini : 7 facts about this versatile actress

Read more

Shocking incident in Chennai : Hostel cook caught shooting videos of women taking bath

Read more

12 years of Polladhavan : 7 facts about this bike film

Read more

Five Best places in Madurai where we get tasty food

Read more

Santhanapara People paid their respects to two year old jovana killed by her mother and partner : A Heartbreaking incident in kerala

Read more

“சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத் தெரியாத பெண்.. தூக்குக் கயிறு நெரிப்பதை எப்படி எதிர் கொண்டாள் என்று தெரியவில்லையே?” – தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் தாய் உருக்கம்

Read more

18 years of Aalavandhan : 7 facts about this cult film

Read more

2 years of Theeran Adigaram Ondru : 7 facts about this blockbuster action film

Read more

மனைவி கண் முன்னே பாராசூட்டில் இருந்து விழுந்து கணவர் உயிரிழப்பு : தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Read more