இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் தொடங்கி 43 ஆண்டுகள்…


0
1 share

தமிழ் சினிமா எத்தனையோ இசையமைப்பாளர்களை கொடுத்துள்ளது. ஆனால் இவரின் இடத்தை நிச்சயம் யாராலும் நிரப்ப முடியாது. காலங்கள் கடந்தும் இன்று வரை இவரின் இசையமைப்பில் வந்த பாடல்களை கேட்காமல் நம் நாட்கள் நகராது. அவர் தான் இசைஞானி ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா. நம் இசைஞானி திரையுலகில் அறிமுகமான ‘அன்னக்கிளி’ திரைப்படம் 1976-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வெளிவந்தது.. ‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளிவந்து 43 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ‘அன்னக்கிளி’ மட்டுமல்ல, நாம் என்றென்றும் கொண்டாடி தீர்க்கும் இசைஞானி இளையராஜாவும் சினிமாவில் அறிமுகமாகி 43 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரின் எத்தனையோ பாடல்கள் நம்மை மகிழ்வித்து வருகிறது. காலங்கள் கடந்தும் அழியாமல் நிலைத்து நிற்கும் அவரின் பாடல்கள் நம் வாழ்வுடன் ஒன்றி விட்டது. இசைஞானி இளையராஜாவின் திரையுலக பயணத்தை விவரிக்க நிச்சயம் இந்த ஒரு கட்டுரை போதாது. ஆனால் இசைஞானி இளையராஜா திரையுலகிற்கு அறிமுகமான அந்த நிகழ்வு எப்படி நடைபெற்றது தெரியுமா?

70-களுக்கு பின் தமிழகத்தில் இந்தி மொழி திரைப்படங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த திரைப்படம் எத்தனை நாட்கள் திரையரங்குகளில் ஓடியது என்பதை பொறுத்து தான். 100 நாட்களை தாண்டி ஒரு திரைப்படம் ஓடினால் அந்த திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டது என கூற முடியும். இந்நிலையில் இந்தி மொழி திரைப்படங்கள் தமிழகத்தில் 20 வாரங்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்தி சினிமாவின் புது மாதிரியான இசை தான்.

தமிழக மக்களுக்கு இந்தி சினிமாவின் கதை ஓரளவுக்கு தான் புரியும். ஆனாலும் புதுமையான இசையால் பட்டி தொட்டி எங்கும் இந்தி சினிமா நன்றாக ஓடி நல்ல வசூல் பார்த்தது. இந்தி சினிமாவின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்த நிலையில் வானொலியிலும் இந்தி பாடல்கள் தான். தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனிடம் சுமார் 600 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம். பத்திரிக்கையாளர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என பன்முகத்தன்மை கொண்டவர் பஞ்சு அருணாச்சலம்.

இளையராஜாவுடன் பஞ்சு அருணாசலம்

தமிழகத்தில் இந்தி மொழி திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததை உணர்ந்த பஞ்சு அருணாசலம் என்ன செய்வதென்று சிந்தித்தார். இந்தி மொழி பாடல்களை பொறுத்தவரை இளமையான புதுவிதமான இசை தான் இந்தி திரைப்படங்களின் ஆதிக்கத்திற்கு காரணம் என்பதால் புதிதாக ஒரு இசையமைப்பாளரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த முடிவு செய்தார் பஞ்சு அருணாச்சலம். இதையடுத்து பல நாட்கள் தொடர்ந்து இசையமைப்பாளரை தேடி வந்த நிலையில் கதாசிரியர் செல்வராஜ் என்பவரிடம் இது குறித்து கூறினார்.

அப்போது செல்வராஜ் தனக்கு ஒரு இளைஞரை தெரியும் எனக் கூறி அந்த இளைஞரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் தான் இசைஞானி இளையராஜா. சிறு வயதிலிருந்தே ஹார்மோனியம் வாசிக்க தெரிந்த இசைஞானி இளையராஜா தன் அண்ணனோடு சேர்ந்து பல ஊர்களில் கச்சேரிகள் செய்து கொண்டிருந்தார். பஞ்சு அருணாசலம் அவர்களை இசைஞானி இளையராஜா சந்தித்த போதே அங்கிருந்த மேஜையின் மீது தாளம் போட்டபடியே பாட ஆரம்பித்தார். அவரின் டியூன்களை கேட்ட பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

அந்த டியூன்கள் கேட்ட உடன் பிடித்தும் போனது. ஆனால் இளையராஜா அறிமுகமாகும் திரைப்படம் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையாக இருக்க வேண்டும் என கருதினார். காரணம் அப்போது தான் இந்தி மொழி படங்களின் ஆதிக்கம் குறையும் என்று சிந்தித்தார். இந்நிலையில் கதாசிரியர் செல்வராஜ் ஒரு கிராமத்து கதையின் அவுட்லைன் ஒன்றை கூற பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு அது மிகவும் பிடித்து போனது. கிராமத்து கதைக்களமாக கிராமிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படத்தின் கதையாக அவர் டெவலப் செய்த போது உருவானது தான் ‘அன்னக்கிளி’.

ஆனால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம் என்பதால் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துவது பெரிய ரிஸ்க் என பஞ்சு அருணாசலத்தின் நணபர்கள் கூறினர். ஆனால் பஞ்சு அருணாசலம் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். பஞ்சு அருணாசலம் ஏற்கனவே 2 படங்கள் சொந்தமாக எடுத்திருந்தாலும் ஆரம்பநிலையில் தான் அவர் இருந்தார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் மீது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் முதல் நாள் ரெக்கார்டிங் அன்று அனைவரும் தயாராக இருந்தார்கள். ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெறும் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே…” பாடல் ரெக்கார்டிங் செய்வதற்காக பாடகி ஜானகியும் தயாராக வந்திருந்தார்.

ரிகர்சல் அனைவருக்கும் பிடித்தபடி அமைந்ததை தொடர்ந்து ரெக்கார்டிங் ஆரம்பமானது. பாடகி ஜானகி பாட துவங்கிய அடுத்த நிமிடமே மின்தடை ஏற்பட்டது. அனைவரும் அதிர்ச்சியில் உறைய மின்சாரமும் உடனடியாக வரவில்லை. இசைக் கலைஞர்கள் உட்பட பலரும் சகுனமே சரியில்லை என பேசிக்கொள்ள இளையராஜாவும் அதிர்ச்சியில் இருந்தார். ஆனால் பஞ்சு அருணாசலம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் மின்சாரம் வந்த நிலையில் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே…” பாடலை சரியாக பாடி அனைவரையும் அசத்தினார் பாடகி ஜானகி. அவர் பாடி முடித்தவுடன் எல்லோரும் கைதட்டினார்கள். அன்றைய நாட்களில் மோனோ ரெக்கார்டிங் என்பதால் மீண்டும் ஒரு முறை போட்டு கேட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

ரெக்கார்டிஸ்டின் உதவியாளர் சம்பத் பாடலை ப்ளே செய்த போது பாடல் வரவில்லை. ரெக்கார்டிஸ்டின் உதவியாளர் ரெக்கார்டிங் ஸ்விட்ச் ஆன் செய்ய மறந்ததால் பாடல் பதிவாகவில்லை. இதனால் இசைஞானி இளையராஜா மிகுந்த வருத்தமடைந்த நிலையில் பஞ்சு அருணாசலம் திறமை தான் முக்கியம், சகுணம் முக்கியமில்லை என அவரை தேற்றினார். ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் பாடல்கள் பின் பதிவு செய்யப்பட்டு திரைப்படமும் ஒரு மாதத்தில் எடுக்கப்பட்டு வெளியானது. ‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளியான நான்கைந்து நாட்களுக்குள் நல்ல வரவேற்பை பெற்றது. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.

‘அன்னக்கிளி’ திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. அப்போது தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் ரசிகர்கள் நனைந்து தீர்த்தனர். தமிழகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்திய இந்தி மொழி பாடல்கள் இளையராஜா என்ற இசைக்கடலில் காணாமல் போனது. அதன் பின் இசைஞானி இளையராஜாவுக்கு தொடர் வெற்றி கிடைத்ததோடு தொட்டதெல்லாம் ஹிட்டானது. இளையராஜா என்ற இசைக்கடலில் ரசிகர்கள் மூழ்கி திளைத்தனர். அதன் பின் தமிழ் சினிமாவுக்கு வந்த பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பல இயக்குனர்களின் திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்தார். திரைத்துறையில் அடியெடுத்து வைத்த பல இயக்குனர்களின் திரைப்படங்கள் வெற்றி பெற இசைஞானியின் இசையும் ஒரு காரணம். அவருடைய பாடல்கள் அனைத்தும் நம் வாழ்வோடு ஒன்றிபோனது. எத்தனையோ இசையமைப்பாளர்கள் திரையுலகிற்கு வந்த போதும் இசைஞானி இளையராஜாவின் இசை கொடுத்த தாக்கம் நிலைத்து நிற்கிறது. காலங்கள் உருண்டோடிய போதும் இளையராஜாவின் இசைக்கு மட்டும் என்றும் அழிவில்லை. நம் வாழ்வுடனே ஒன்றி நம்முடன் பயனிக்கும் இவரின் பாடல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. 1000 திரைப்படங்களை கடந்து இன்றும் இந்த இசைக்கடலில் நாம் மூழ்கி கொண்டு தான் இருக்கிறோம். தொடரட்டும் ராஜாவின் ஆட்சி..


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format