அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக சுவாசக்கருவி இயங்காததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்


0
1 share

மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் அவரச சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை அண்ணா பேருந்து நிறுத்தம் அருகே அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏறபட்டது. இதனால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகே மின்சாரம் வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் மின் தடை காரணமாக இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா(55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள்(60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன்(52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் உயிரிழந்தனர். இதன் பின் மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதபடி அங்கிருந்த மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற பேட்டரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் உடனடியாக வென்டிலேட்டர் இயக்கப்பட்டதால் சிகிச்சையில் இருந்த மற்ற நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸ் துணை கமிஷ்னர் சசிமோகன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவ அதிகாரி ஶ்ரீலதா ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த புகாரை மறுத்த டீன் வனிதா “நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி இயங்காமல் போன வென்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால் யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள், ஜெனரேட்டர் பழுதாக இருந்தது உண்மையே” என்று கூறினார். மேலும் மின்சார பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News Courtesy : News 18


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format