74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான மூதாட்டி : மருத்துவர்கள் சாதனை


0
1 share

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் மருத்துவர்களின் சிகிச்சையால் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கு வயது 80. இவரின் மனைவி மங்கயம்மாவுக்கு வயது 74. இவர்கள் இருவருக்கும் கடந்த 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காத நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பேறு பெற முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. இவர்களுக்கு திருமணமாகி 57 வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஆந்திராவிலுள்ள மருத்துவமனையில் 55 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மங்கயம்மா இந்த மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிக்க சிகிச்சை பெற துவங்கினார். இந்த சிகிச்சையின் மூலம் கருவுற்ற மங்கயம்மாவுக்கு இன்று காலை 10:30 மணிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட இந்திய மூதாட்டி இவர் தான். இவரை போல் கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் தனது 70 வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர் செயற்கை கருத்தரிப்பு முயற்சியிலும் குழந்தை பெற முடியாததால் அரசு காப்பகங்களில் குழந்தையை தத்தெடுக்கின்றனர். எனினும் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் பலரால் குழந்தைகளை தத்தொடுக்க முடிவதில்லை. இந்நிலையில் 74 வயதாகும் மங்கயம்மா இரட்டை குழந்தைக்கு தாயானது அவரின் இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறலாம்.


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
1
Cute
WTF WTF
1
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format