இந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞரை அவமானப்படுத்திய விமான நிலைய அதிகாரி


இந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலைய குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆபிரஹாம் சாமுவேல் என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்வதற்காக மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்தி தெரியாததால் தன்னை விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியதாவது:

“தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு தெரியும். அதனால் மும்பையில் உள்ள சத்ரபதி விமான நிலையத்தில் ‘உனக்கு இந்தி தெரியாதா, அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ’ என்று குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமானப்படுத்தினார். அங்கிருந்த 3 அதிகாரிகளில் ஒரு அதிகாரி அப்படி நடந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு எனக்கு விமானம், இல்லையென்றால் இந்தியாவிலிருந்து புகார் அளித்திருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக ஆபிரஹாம் சாமுவேல் பல டிவீட்களை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் ஒரு டிவீட்டில், ” இந்தி தெரியவில்லை என்பதற்காக மட்டும் அந்த அதிகாரி என்னை அவமதிக்கவில்லை. தமிழ்க் குடியுரிமை கவுன்டரைக் கண்டுபிடித்துச் செல்லும் படியும் கூறினார். இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழனாக இருப்பதில் இன்னும் பெருமைப்படுகிறேன். அதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் இந்தியர்களே அல்ல” என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு டிவீட்டில் “அந்த குடியுரிமை அதிகாரிக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது. என் கண் முன்னே வெளிநாட்டு பிரஜையிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசியதை பார்த்தேன்” என்று ஆபிரஹாம் சாமுவேல் பதிவிட்டிருந்தார்.

மேலும் தன் பதிவை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் டேக் செய்திருந்தார். இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் பெரும் விவாதம் ஏற்பட்டதோடு ஆபிரஹாமின் பதிவு 1512 முறை ரீடிவீட் செய்யப்பட்டது. இதையடுத்து ஆபிரஹாம் சாமுவேலை அவமானப்படுத்திய அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆபிரஹாம் சாமுவேல் அமெரிக்காவில் உள்ள க்ளாக்ஸ்டன் பல்கலையில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS