தன் குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி உணவு டெலிவரி செய்யும் பெண்

690 Views
By bhuwaneshwaran-g | November 28, 2019

சென்னையில் உணவுகளை டெலிவரி செய்யும் பெண் ஒருவர் டூவிலரில் தன் குழந்தையுடன் பயணித்து வருகிறார்.

சென்னையில் டூவிலர்களில் பெண்கள் பயணம் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சென்னை அயனாவரம் பகுதியில் பைக்கில் கைக்குழந்தையை அணைத்த படி உணவு டெலிவரி செய்து வருகிறார் ஒரு பெண். அவரின் பெயர் வள்ளி. பி.எஸ்.சி. பட்டதாரியான அவருக்கு தினகரன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவருக்கு ஒன்றரை வயதில் சாய்கிஷோர் என்ற மகன் உள்ளார். உணவு டெலிவரி செய்வது குறித்து அவர் கூறுகையில், “என் கணவர் தினகரன் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவரின் சம்பளத்தில் குடும்பத் தேவைகளை சமாளிக்க முடியவில்லை. இதனால் நானும் வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். வீட்டில் குழந்தையைக் கவனிக்க ஆள் இல்லை. மேலும் காப்பகத்திலும் குழந்தையை விட மனம் இல்லை. இதனால் குழந்தையை கவனித்தபடியே என்ன வேலை செய்யலாம் எனக் கூகுளில் தேடினேன். அப்போது தான் ஊபர் ஈட்ஸில் டெலிவரி வேலை குறித்த தகவல்கள் கிடைத்தன.

உடனே அந்த நிறுவனத்துடன் பேசினேன். அவர்களும் ஒப்புக் கொண்டனர். டெலிவரி செய்யும் போது குழந்தையை அழைத்துச் செல்வேன் என கூறிய போது அதற்கும் ஒப்புக்கொண்டனர். நான் 14 ஆண்டுகளாக டூவிலர் ஓட்டிவருகிறேன். லைசென்ஸும் உள்ளது. கடந்த மாதம் ஊபரில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் டெலிவரி அண்ணாநகர் என்பதால் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அப்போது சாய் கிஷோரை என் நெஞ்சோடு அணைத்தபடி டூவிலரில் சென்றேன். அண்ணாநகருக்குச் சென்று வாடிக்கையாளரிடம் உணவை டெலிவரி செய்தபோது அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அந்த நிகழ்வு எனக்குள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

வேலைக்குச் சேர்ந்து 3-வது நாளில் ஊபர் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவருக்கு என்னைப்பற்றிய தகவல் தெரிந்தது. உடனே அவர் என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரும் எனக்கு வாழ்த்துகள் கூறியதோடு சாய்கிஷோருக்கு அன்பளிப்பும் கொடுத்தார். அதன்பிறகு நான் தினமும் மகிழ்ச்சியோடு டெலிவரி செய்துவருகிறேன். தினமும் முற்பகல் 12 மணியளவில் பணியைத் தொடங்குவேன். ஆன் லைனில் எனக்கு ஆர்டர்கள் வரும். அதை எடுத்துக்கொண்டு மாலை 4 மணி வரை டெலிவரி செய்வேன். அதன்பிறகு வீட்டுக்குச் சென்றுவிடுவேன். பிறகு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டெலிவரி. அப்போதும் சாய்கிஷோர் என்னோடு இருப்பான்.

ஒரு நாளைக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வரை குழந்தையோடு பயணிப்பேன். ஒரு டெலிவரி என்பது 4 கிலோ மீட்டர் முதல் 5 கிலோமீட்டருக்குள் தான் இருக்கும். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். அந்த சமயத்தில் சாய் கிஷோருக்குத் தேவையான உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவற்றைக் கொடுப்பேன். அதன்பிறகு அடுத்த ஆர்டர். இப்படியே வாழ்க்கை ஓடுகிறது” என உற்சாகத்துடன் கூறினார். தான் சம்பாதிக்க துவங்கிய பின் குடும்பக் கஷ்டம் குறைந்ததாக கூறும் வள்ளி தன்னுடைய இந்த முயற்சிக்கு கணவரும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.

WHATS YOUR REACTION?

0
2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

Happy Birthday Aadhi : 8 facts about this talented actor

By Bhuwaneshwaran G | December 14, 2019
Read more

kollywood, awesome spotlight

Super Star Blockbuster : Enthiran – 7 facts about this blockbuster film

By Salesh Dipak | December 14, 2019
Read more

kollywood, awesome spotlight

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

By Salesh Dipak | December 14, 2019
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

7 facts about former adult star Mia Khalifa

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more

Deepa to file a case against A.L Vijay’s Thalaivi starring Kangana Ranaut as Jayalalitha

Read more

Hyderabad police encounter : More details about the incident

Read more

Happy birthday Shalini : 7 facts about this versatile actress

Read more

19 years of Snegithiye : 7 facts about this cult the thriller

Read more