மனிதி #4: சாவித்திரிபாய் புலே – ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் கைம்பெண்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெண்


0
322 shares

சாவித்திரி பாய் புலே இந்திய வரலாற்றில் அதிகம் வெளிவராத அல்லது மறைக்கப்பட்ட பெயர் என்று கூறலாம். சாவித்திரிபாய் புலே 1831-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் வகுப்பை காரணம் காட்டி கல்வி வாய்ப்பு இவருக்கு மறுக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி தனது 9 வயதிலேயே ஜோதிராவ் புலேவுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். ஜோதிராவ் புலே ஒரு சமூகப் போராளி. அக்காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்துப் போராடியவர் ஜோதிராவ் புலே. அவரே சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி போதிக்கிறார். அவர் கற்றுத்தேர்ந்த பி்ன், இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைக் கொடுக்கப் போராட துவங்குகிறார்கள். 1847-ல் ஒடுக்கப்பட்ட மற்றும் கைம்பெண் ஆன பெண்களுக்காக ஒரு பள்ளியைத் இந்த தம்பதியினர் தொடங்கினர்.

அன்றைய காலகட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகமாக நிகழ்ந்ததன் விளைவால் இளம் வயதிலேயே கைம்பெண் ஆன பெண்கள் பலர் இருந்தார்கள். குழந்தைத் திருமணத்தால் கைம்பெண் ஆன பெண்களுக்கு தலை முடியை மழித்து விடும் கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்த நிலையில் அப்பணியைச் செய்து வந்தவர்களே அச்செயலை மறுக்கும் அளவுக்குத் தீவிரமாகப் போராடி வெற்றி பெற்றார்கள் புலே தம்பதியினர்.

இந்த 21- நூற்றாண்டில் கூட மறுமணம் செய்து கொள்பவர்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சமூகம் இருக்கும் நிலையில் 18-ம் நூற்றாண்டிலேயே கைம்பெண்களுக்கு மறுமணம் செய்துவைத்தனர் புலே தம்பதியினர்.

1848-ம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியை பூனேவில் தொடங்குகின்றனர். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் சாவித்திரி பாய் புலே. அன்றைய காலகட்டத்தில் கல்வி பயிற்றுவித்த முதல் இந்திய பெண் ஆசிரியர் இவர் தான். இதையடுத்து 1849-ல் ஒரு பள்ளியைத் தொடங்குகின்றனர் புலே தம்பதியினர். அன்றைய காலக்கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்குமாக இயங்கிய ஒரே பள்ளி அதுதான். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, சாவித்ரி பாய் புலே கல்வி வழங்கியதை அன்றைய பழைமைவாதிகள், ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. எனவே சாவித்திரி செல்லும் வழியில் அவர் மீது கற்களும், மாட்டுச் சாணமும், மனித மலமும் வீசப்பட்டது

இதை தன் கணவர் ஜோதிராவிடம் கூறி வருந்த அவர் `பழைய ஆடைகளை அணிந்துகொண்டு போ! பின் அங்குச் சென்று நல்ல உடைகளை உடுத்திக்கொள்’ என்றார். அதனையே பின்பற்றினார் சாவித்திரி பாய். சாதி என்ற மனநோயை எதிர்த்து கல்வி மறுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வியினைத் தந்துவிட வேண்டும் என்று வேட்கை கொண்டு அதற்காகவே அரும்பாடுபட்ட ஒரு பெண்ணை இந்த சமூகம் கல்வீசி காயப்படுத்தியதோடு சாணங்களை வீசி அவமானப்படுத்தியது.

மேலும் தீண்டாமையின் கொடுமை அக்காலத்தில் உச்சம் பெற்றிருந்த நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்குத் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய நிலையைக் கண்டு தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர் புலே தம்மதியினர். 1852-ல் சாவித்திரி பாய் புலே தொடங்கி வைத்த `மஹிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சேவை மையம் மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் உள்ளிட்ட சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்பு உணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. இந்நிலையில் மகாராஷ்டிராவை பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர். ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது. இந்நிலையை கண்ட சாவித்திரி பாய் புலே அயல்நாட்டில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த தன் மகனை இந்தியாவுக்கு வரவழைத்து மருத்துவமனை அமைத்துக்கொடுத்தார். நோயால் பாதிக்கப்பட்டவர்களை தோளில் சுமந்து வந்து தன் மகனின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவினார் ஜோதிராவ் புலே. இந்நிலையில் பாண்டுரங்கன் என்ற 10 வயதுச் சிறுவனை தூக்கி வரும்போது ஜோதிராவ் புலேவுக்கு நோய்த்தொற்று பரவியது. பாண்டுரங்கன் பிழைத்துக்கொள்ள நோயால் உயிரிழந்தார் ஜோதிராவ் புலே. தன் கணவர் இறந்த பின்னும் அவரின் கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினார் சாவித்திரி பாய் புலே.

கடந்த 2017 ம் ஆண்டு இவரின் பிறந்தநாளையொட்டி பிரத்தியேக `கூகுள் டூல்’ அமைத்துச் சிறப்பித்தது கூகுள் நிறுவனம். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் கைம்பெண்களுக்காகவும் போராடியதோடு பெண் கல்வியை வலியுறுத்திய சாவித்திரி பாய் புலே என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்.


Like it? Share with your friends!

0
322 shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format