குழந்தையின் உயிரை காப்பாற்ற 4 மணி நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்


இதய பாதிப்புக்குள்ளான குழந்தையின் உயிரை காப்பாற்ற 4 மணி நேரத்தில் திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. வாட்ஸ் ஆப் செயலியில் இயங்கிய குழுவின் மூலம் 15 ஆம்புலன்ஸ்கள் இனைந்து குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு இதய பாதிப்பு இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் சிகிச்சைக்காக குழந்தையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதால் முடிந்த அளவு வெகு விரைவாக குழந்தையை சென்னைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதனால் நவீன வசதிகள் உள்ள ஆம்புலன்ஸ் ஒன்று உடனடியாக தயார் செய்யப்பட்டது. சென்னைக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியம் குறித்த தகவல் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது. இதையடுத்து அனைவரும் குழந்தைக்கு உதவ முன்வந்தனர். திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் ஆங்காங்கே 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் முன்பாக மற்றொரு ஆம்புலன்ஸ் சென்று அதற்கு வழி ஏற்படுத்தியது. இவ்வாறு ஒன்று மாற்றி ஒன்றாக வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் முன்னே சென்று வழி ஏற்படுத்தியது. அதிவேகத்தில் சாலையில் சீறிப் பாய்ந்த ஆம்புலன்ஸ் திருச்சி முதல் சென்னை இடையேயான 330 கிலோமீட்டர் தொலைவை 4 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து குழந்தையை சென்னையில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தது. குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு மருத்துவர்களும் பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS