கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ – அனிதாவின் அண்ணன் அளித்த பதில்


2
311 shares, 2 points

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று உயிரிழந்த மாணவி அனிதாவின் பெற்றோரிடம் கேளுங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். இதற்கு அனிதாவின் அண்ணன் முகநூலில் கமல்ஹாசனுக்கு பதிலளித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரிப்பது மட்டுமல்லாமல் நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மத்திய மாநில கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்கள் நீதி மய்யத்துக்கு பிரச்சாரம் செய்திருந்தார்.

அந்த வீடியோவில் முதலில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பின்போது பேசிய “கலைஞரின் மகனாக கேட்கிறேன்’ என்ற ஆடியோ கேட்கிறது. அதனைக் கேட்டு கமல் எரிச்சல் அடைகிறார். அடுத்ததாக, பிரதமர் மோடியின் குரல் கேட்கிறது. மீண்டும் வெறுப்படையும் கமல் தொலைக்காட்சி சேனலை மாற்றுகிறார். அடுத்து, ஹெச்.ராஜாவின் குரல் கேட்கிறது. அதீத கோபத்தில் டி.வியை உடைக்கிறார். அதன்பிறகு, பார்வையாளர்களை நோக்கி பேசும் கமல்ஹாசன், “முடிவு பண்ணீட்டங்களா? யாருக்கு ஓட்டு போடப்போறீங்க? குடும்ப அரசியல் பண்ணி நாட்டேயே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? நம்ம உரிமைக்காக போராடிய நம்மள அடிச்சு துரத்துனாங்களே!! அவங்களுக்கா? கார்பரேட் கை கூலியா மாறி நம்ம மக்களையே சுட்டு கொன்னாங்களே! அவங்களுக்கா? அனிதாவின் அப்பா அம்மாவிடம் கேளுங்கள், யாருக்கு வாக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள்” என்று கமல்ஹாசன் பேசியிருந்தார்.

இதற்கு நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முக நூலில் பதிலளித்துள்ளார்.

அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான்…

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்…

அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..

பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில்…

அனிதா இறந்த போது “திருமாவளவன்” இதை சும்மா விடக்கூடாது என்று கூறினார். திருமாவளவன் தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் தலைவர் திருமாவளவன் (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே – என்றும் #கமல்_ரசிகன்”.

இவ்வாறு மணிரத்தினம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ப.சிதம்பரம் நீட் வேண்டுமா? வேண்டாமா? யாருக்கு வாக்களிக்கவேண்டும் முடிவு செய்யுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் மணிரத்தினம் பதிலளித்துள்ளார்.

“நீட் தேர்வு குறித்த அரசியல் கட்சிகளின் முடிவு தெளிவாக தெரிந்து விட்டதால்,பெற்றோரும் மாணவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டனர்..
-ப.சிதம்பரம்

அப்படியே உங்க மனைவி நளினி சிதம்பரத்திற்கு தெளிவுபடுத்தி விடுங்க அய்யா…நீட் வேணும்னு கோர்ட்டுக்கு கட்டு தூக்கிட்டு போய்டப் போறாங்க. நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க சிதம்பரம்..” என மணிரத்தினம் பதிவு செய்துள்ளார்.


Like it? Share with your friends!

2
311 shares, 2 points

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
2
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format