மது ஒழிப்பு போராளி நந்தினியின் திருமணம் இன்று எளிமையாக நடந்தது


1
1 share, 1 point

மது ஒழிப்பு போராளி நந்தினிக்கும் குணா ஜோதி பாஸுக்கும் மதுரை மாவட்டம் தென்னம்பநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில் எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது.

மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் மது ஒழிப்புக்காக குரல் கொடுத்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியுள்ளனர். கல்லூரியில் படிக்கும் போதே தனது போராட்டத்தை பல வடிவங்களில் நடத்தி மது ஒழிப்புக்காக நந்தினி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது “ஐபிசி 328-ன் படி டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா?” என நந்தினி நீதிபதியிடம் வாதாடினார்.

இதனால் இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுக்குமாறு நீதிபதி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் எழுதிக்கொடுக்க மறுத்ததை தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கறிஞர் நந்தினிக்கு கடந்த ஜூலை 5-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ஜூலை 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நந்தினியின் திருமணத்தை அவர் விடுதலையான பின் வேறொரு நாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நந்தினியின் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோயிலில் நந்தினிக்கும் ஜோதிபாஸுக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் பலரும் நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Photo Courtesy : Vikatan

Like it? Share with your friends!

1
1 share, 1 point

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format