13 பேரை கொன்ற பெண் புலி அவனி சுட்டு கொலை


மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 பேரை கொன்ற பெண் புலி அவனி சுட்டுக் கொல்லப்ட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் கடந்த 2012-ல் அவனியின் நடமாட்டம் தொடங்கியது. அந்தப் பகுதியில் மொத்தம் இருந்தது ஒரு ஆண் புலி, மற்றொன்று அவனி என பெயரிடப்பட்ட பெண் புலி. இந்நிலையில் கொல்லப்பட்ட 13 பேரின் உடலிலும் அவனியின் விரல் அடையாளங்கள் இருந்தது மரபணு சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பலரது உயிரை பறித்த பெண் புலி அவனியை கண்டதும் சுட உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 3 மாத காலமாக
பெண் புலி அவனியை தேடும் பணியில் 150-க்கும் மேற்பட்டோர்
ஈடுபட்டு வந்தனர். டிரோன்கள், வேட்டை நாய்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில் திப்பேஸ்வர் புலிகள் சரணாயளத்திற்கு உட்பட்ட பகுதியில் அவனி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று இரவு அவனி சுட்டுக் கொல்லப்பட்டது. கொல்லப்பட்ட பெண் புலி அவனிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS