தஞ்சை பெரிய கோயில் அருகே ஆழ்துளைக் கிணறு – கோயிலுக்கு ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை


0
1 share

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழகத்தின் அடையாளமாக திகழும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோழர்களின் கட்டிடக் கலைக்கு இன்னும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது இக்கோயில். தஞ்சை பெரிய கோயில் உலக மரபுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்களை காணவும் பெருவுடையார், வராகி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பெரிய கோயில் அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து பெரிய கோயில் பாதுகாப்புக் குழுவினர் கூறியதாவது:

“ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 120 அடி ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வராததால் புதிதாக 500 அடி ஆழ ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என்பது தொல்லியல் துறையின் விதிகளில் ஒன்று. ஆனால் அந்த விதியை மீறி ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு வரும் நிலையில் 216 அடி உயரமும், ஒன்றரை லட்சம் டன் எடையும் கொண்ட கோபுரம் உள்ளிட்ட கோயில் கட்டுமானங்களுக்கு ஆபத்து ஏற்படும்” என கூறினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், “ராஜராஜ சோழன் சிலை உள்ள இடத்தில் உள்ள பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் இல்லாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. எனவே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கிறோம். இந்த இடம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வேறு யாரிடமும் அனுமதி பெறவில்லை” என கூறினர். தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் இது குறித்து கூறிய போது, “இக்கோயிலை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கோயிலின் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என்பது தொல்லியல் துறை விதி.

எனவே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது கோயிலின் உள்ளே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது . அப்போது தண்ணீருக்கு பதிலாக சிறிய கற்கள் மற்றும் துகள்கள் மட்டுமே வெளியேறின. அவற்றை ஆய்வு செய்த போது மண்ணைக் கொண்டே கோயிலின் அடிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு அப்போது பணி நிறுத்தப்பட்டது” என கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாய் நின்று தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகிறது தஞ்சை பெரிய கோயில். அந்த கோயிலுக்கு அருகில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அரசு கவனிக்குமா?


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format