10 மாதங்களாக சம்பளம் தராததால் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்

1058 Views
By shanmugam-ravichandrann | November 8, 2019

நிலம்பூரில் 10 மாதங்களாக சம்பளம் தராததால் பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.

பொதுத்துறை நிறுவனமான ‘பி.எஸ்.என்.எல் ‘ சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் சம்பளப் பணம் தருவதற்கு நிதி இல்லாமல் போராடுவதாக கூறப்படுகிறது. ஒன்றரை லட்சம் பேர் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையாக தானாக முன் வந்து ஓய்வு பெறும் திட்டத்தை கூடுதல் பண பலன்களோடு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

ராமகிருஷ்ணன் (52 வயது) என்ற மாற்றுத்திறனாளி ஊழியர் நீலாம்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவு பணியாளராக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்த 10 மாதங்களாக சம்பளம் தராத காரணத்தினால் பேருந்தில் பயணிக்க கூட பணம் இல்லாமல், பல கிலோமீட்டர் தொலைவு நடந்தே வந்து வேலை செய்துள்ளார். நேற்று தனது வழக்கமான வேலையைச் செய்து கொண்டிருந்த ராமகிருஷ்ணன், அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது ராமகிருஷ்ணனின் தற்கொலை தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த நிலம்பூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் வந்த பின்னரே, ராமகிருஷ்ணனின் உடலை இறக்க அனுமதிப்போம்” என்று பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து, மலப்புரம் மாவட்ட பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் நிலம்பூருக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ராமகிருஷ்ணனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாகவும், மலப்புரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு நிதி திரட்டுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பின் ராமகிருஷ்ணனின் உடல் அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராமகிருஷ்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன் போல் இன்னும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

WHATS YOUR REACTION?

2
1
6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

News

Doctor sucks urine out of the bladder using his mouth and saves the life of a passenger

By Jegan Ravichandran | November 22, 2019
Read more

News

More than 67 thousand schools in madhya pradesh without electricity

By Jegan Ravichandran | November 22, 2019
Read more

kollywood, awesome spotlight

Happy birthday Ashwin Saravanan : 7 facts about this promising director

By Salesh Dipak | November 22, 2019
Read more

Trending

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

Happy birthday Shalini : 7 facts about this versatile actress

Read more

Shocking incident in Chennai : Hostel cook caught shooting videos of women taking bath

Read more

12 years of Polladhavan : 7 facts about this bike film

Read more

Five Best places in Madurai where we get tasty food

Read more

Santhanapara People paid their respects to two year old jovana killed by her mother and partner : A Heartbreaking incident in kerala

Read more

“சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத் தெரியாத பெண்.. தூக்குக் கயிறு நெரிப்பதை எப்படி எதிர் கொண்டாள் என்று தெரியவில்லையே?” – தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் தாய் உருக்கம்

Read more

18 years of Aalavandhan : 7 facts about this cult film

Read more

2 years of Theeran Adigaram Ondru : 7 facts about this blockbuster action film

Read more

மனைவி கண் முன்னே பாராசூட்டில் இருந்து விழுந்து கணவர் உயிரிழப்பு : தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Read more