குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு

771 Views
By bhuwaneshwaran-g | January 30, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்

தொடர்ந்து அந்த மர்ம நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். இந்த சம்பவம் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடந்தது. அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை வீடியோ எடுத்தனர். மேலும் மாணவர்களை நோக்கி துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபரை போலீசார் சுற்றி வளைக்காமல் அமைதியாக இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பின்பு தான் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

காயமடைந்த மாணவர்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ராம்பகத் கோபால் ஷர்மா என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WHATS YOUR REACTION?

1
2
1

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

14 years of Dishyum : 7 facts about this romantic film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

8 years of Marina : 7 facts about this children film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

Dhanush’s exciting lineup of films for 2020-21 : Details inside

By Salesh Dipak | February 3, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more