16 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க மத்திய அரசு அனுமதி


கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள ஒரு நபர் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 16 வயது பூர்த்தி செய்தவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அனுமதி கோரி கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திற்குட்பட்ட மின்சாரத்தால் இயங்கும் கியர் இல்லாத பைக் ஸ்கூட்டர்களை ஓட்ட ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடையாத பதின் பருவத்தினர் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது குறித்த பிரச்சினைக்கு இது நல்ல தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர்கள் பல மாடல்களில் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன.
கியர் பொருத்திய இருசக்கர வாகனங்களை விட கியர் இல்லாத இருசக்கர வாகனங்கள் இலகுவானதாக இருப்பதே மத்திய அரசு ஒப்புதல் வழங்க காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS