‘நீட்’ தேர்வின் மூலம் மத்திய அரசுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.192 கோடி வருமானம்

374 Views
By bhuwaneshwaran-g | November 7, 2019

தமிழகத்தில் உள்ள பல ஏழை மாணவர்களின் கனவு நன்றாக படித்து மருத்துவராக வேண்டுமென்பது தான். 12-ம் வகுப்பில் இவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து முன்பு மருத்துவம் படிக்க கவுன்சிலிங் நடைபெற்றது. ஆனால் அந்த சூழல் இப்போது இல்லை. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

‘நீட்’ தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ‘நீட்’ தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் மருத்துவம் படிக்கும் மாணவர்களை முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அது குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்களும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எப்படி ஒரே பாடத்திட்டம் கொண்ட தேர்வை எழுத முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க மறுபுறம் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாததால் அனிதா, பிரதீபா என சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தை கொண்டு ‘நீட்’ தேர்வை அனுகுவது கடினம். தமிழகத்துக்கு ‘நீட்’ தேவையில்லை” என கல்வியாளர்கள் அழுத்தமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்தை மறுத்த அரசு ‘நீட்’ தேர்வின் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை குறையும் என தெரிவித்தது. இந்நிலையில் ‘நீட்’ தேர்வின் மூலம் இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ.192 கோடி வருமானம் சம்பாதித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ கவுன்சிலிங் குழு நடத்தும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த கலந்தாய்வுக்கு 2018-2019 ஆண்டில் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசுக்கு நீட் தேர்வில் கிடைக்கும் வருமானம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 15,19,375 மாணவர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக ரூ.1,92,43,22,162 வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.18,32,87,500 வசூலித்த கவுன்சிலிங் குழு அதில் ரூ.2,76,78,614 மட்டுமே கலந்தாய்வுக்காக செலவிட்டது. மீதமுள்ள தொகையை மத்திய அரசிடம் ஒப்படைத்ததாக மருத்துவ கவுன்சிலிங் குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை மூலம் கிடைக்கும் வட்டித் தொகையே வருங்காலங்களில் கலந்தாய்வை நடத்த போதுமானதாக இருக்கும் எனவும் அதனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் கலந்தாய்வு கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

WHATS YOUR REACTION?

0
0
0
0
0

1 Comment

Join the Conversation

  1. I just want to say I’m all new to blogging and certainly loved your blog. More than likely I’m going to bookmark your blog post . You definitely have remarkable articles. Regards for revealing your web site.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

14 years of Dishyum : 7 facts about this romantic film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

8 years of Marina : 7 facts about this children film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

Dhanush’s exciting lineup of films for 2020-21 : Details inside

By Salesh Dipak | February 3, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more