சென்னை சேலையூரில் 6 வயது சிறுமி மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்ட கொடூரம்


1
2 shares, 1 point

சென்னை சேலையூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியிலிருந்து 6 வயது சிறுமியை அவரின் சித்தி தூக்கி வீசி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை சேலையூரை அடுத்த செம்பாக்கம் ஏரிக்கரைத் தெரிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார். பார்த்திபனின் முதல் மனைவி சரண்யா கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் பார்த்திபனின் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவதாக சூர்யாகலா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். பார்த்திபனின் முதல் மனைவி சரண்யாவுக்கு ராகவி என்ற 6 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ராகவி அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ளது புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சூர்யாகலா

அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து ராகவி இறந்திருக்கலாம் என்று அவரின் உறவினர்களும் போலீசாரும் முதலில் கருதினர். ஆனால் போலீசாரின் தொடர் கேள்விகளால் ராகவியின் சித்தியும் பார்த்திபனின் 2-வது மனைவியுமான சூர்யகலா இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பார்த்திபன் பணியாற்றி வருகிறார். பார்த்திபனின் முதல் மனைவி சரண்யா கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் பார்த்திபனின் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவதாக சூர்யாகலாவை திருமணம் செய்து வைத்தனர். ராகவியை கவனித்துக்கொள்ள சரண்யாவின் அம்மா வளர்மதி பார்த்திபனின் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் வளர்மதி தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் ராகவியை சூர்யாகலா கவனித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் தான் மொட்டை மாடியிலிருந்து ராகவி தவறி விழுந்து விட்டதாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக மொட்டை மாடிக்கு போலீசார் சென்று பார்த்த போது மொட்டை மாடியின் தடுப்புச் சுவர் 2 அடிக்கு மேல் உள்ளதை போலீசார் கண்டுள்ளனர். இதனால் ராகவி தவறி விழ வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த போலீசாருக்கு ராகவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யகலாவை போலீசார் விசாரித்த போது அவரால் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி ராகவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய குற்றத்தை சூர்யகலா ஒப்புக்கொண்டார்.

ராகவி மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் மீதுள்ள ஆத்திரத்தில் சூர்யகலா இந்த கொலையை செய்ததாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். ராகவியை மொட்டை மாடியிலிருந்து வீசிய பின் ராகவியைக் காணவில்லை என சூர்யகலா முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். பிறகு பார்த்திபனுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளார். ராகவியை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். மொட்டை மாடிக்கு சென்றவர்கள் அங்கிருந்து கீழே பார்த்த போது அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் புதராக காணப்படும் பகுதியில் ராகவி சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. மாடியிலிருந்து ராகவி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஊருக்குச் சென்றதால் ராகவியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ராகவியை மற்றவர்களுடன் தேடிய போது கூட சூர்யகலாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. ஆனால் போலீசார் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் சூர்யகலா கொலை வழக்கில் சிக்கிக்கொண்டார்.

ராகவி தூக்கி வீசப்பட்ட மொட்டை மாடி

ராகவியின் சடலத்தை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். குறிப்பாக அவரின் பாட்டி வளர்மதி, “உன்னையும் என்னோடு ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தால் இப்படி நடந்திருக்காதே” என கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது. முதுமையிலும் பேத்தியை கவனித்து வந்த வளர்மதிக்கு ராகவியின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று. 6 வயது சிறுமி ராகவியை கொலை செய்தது குறித்து விரிவாகக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சூர்யகலா. சூர்யகலா தற்போது கர்ப்பிணியாக உள்ள நிலையில் இப்படியொரு கொடூர செயலை செய்துள்ளார். ராகவியை கொலை செய்த குற்றத்திற்காக சூர்யகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Like it? Share with your friends!

1
2 shares, 1 point

What's Your Reaction?

Angry Angry
14
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
1
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format