குக்கர் சின்னத்தை தர மறுத்தது தேர்தல் ஆணையம்- டி.டி.வி.தினகரனுக்கு சிக்கல்


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி பல்வேறு அணிகளாகப் பிரிந்தனர்.அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார் டி.டி.வி.தினகரன்.அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டைஇலையை மதுசூதனன் மற்றும் தினகரன் இருவரும் உரிமை கோரிய நிலையில் அந்த சின்னத்தைக் கைப்பற்ற தினகரன் லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தேர்தலில் ஓட்டுக்களை பெறப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.முதலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடந்த தேர்தலில் அவருக்கு “குக்கர்” சின்னம் ஒதுக்கப்பட்டது.அந்த தேர்தல் பிரச்சாரத்தின் வாக்காளர்களுக்கு குக்கர் லஞ்சம் கொடுத்தது…இருபது ரூபாய் நோட்டு டோக்கனாக வழங்கி பணப்பட்டுவாடா செய்ய முயற்சித்தது என்று பல்வேறு சர்ச்சைகள் எழும்பினாலும், அந்த தேர்தலில் வெற்றிபெற்றார் தினகரன்.இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர் தினகரன்.

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குக்கர் சின்னத்தை இடைத் தேர்தலில் தன் கட்சிக்கு ஒதுக்குமாறு தினகரன் வழக்குத் தொடர்ந்தார்.ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு நிரந்தர சின்னம் வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மீண்டும் குக்கர் சின்னத்தை வாங்கிவிட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் டி.டி.வி.தினகரன்.

SHARE YOUR THOUGHTS

More From: General

DON'T MISS