பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


-1
1.6k shares, -1 points

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழஙக வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதி எஸ்.பி.-யை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன் வராததால் இந்த கொடூர கும்பல் பல பெண்களை சீரழித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலம் வேறு யாருக்கும் நிகழ கூடாது என்பதற்காக புகார் கொடுத்த நிலையில் பொள்ளாச்சி காவல்துறை எஸ்.பி. பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் முழு விவரங்களையும் வெளியிட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய அரசானையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரியின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் விவரங்களை வெளியிட கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பையும் மீறி காவல்துறை அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது. இனி பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்பதற்காகவே காவல்துறை இவ்வாறு செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காகவும் வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.


Like it? Share with your friends!

-1
1.6k shares, -1 points

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format