குரூப் டான்ஸர் மரணம் – ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்த நடிகர் அஜித்


சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

திரைப்படத்தின் ஒரு பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது நடனக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் திடிரென வாந்தி எடுத்தார், அதன் பின் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஈ.சி.ஜி. உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் எடுக்கும் போதே, சரவணனின் உயிர் பிரிந்தது. இந்த தகவல் நடிகர் அஜித்துக்கு தெரியவர உடனே மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். பிரேத பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையில் இருந்த நடிகர் அஜித் சரவணனின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளார்.

மேலும் சரவணனின் உடலை சென்னைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தன் சொந்த செலவில் அஜித் செய்திருக்கிறார். சரவணனின் உடலை புனேவில் இருந்து மும்பைக்கு அனுப்பி, அதன் பின்அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு தொலைப்பேசியில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். மேலும் நடனக் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

ஒரு உச்ச நடிகர் தன்னுடன் பணியாற்றும் அனைவருடனும் அன்பாக இருப்பதை கண்டு குரூப் டான்ஸர்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்தனர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS