உலக கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ள தருமபுரி ஏழை இளைஞர்கள் : நிதியுதவி இல்லாததால் போட்டியில் கலந்து கொள்ள தவிக்கும் அவல நிலை

168 Views
By bhuwaneshwaran-g | January 9, 2020

நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றும் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி இல்லாததால் தருமபுரி இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சிந்தனைச்செல்வன், முகேஷ், பாலாஜி, சூர்ய பிராசாத், சஞ்சீவ் குமார் உள்ளிட்ட இளைஞர்கள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் போது கைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பள்ளிகளில் விளையாடி வந்தனர். இதைத்தொடர்ந்து கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அமைப்பில் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். பின் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடி உலக அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் உலக அளவிலான கைப்பந்து போட்டி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை நிலவி வருகிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேபாளத்திற்கு சென்று வர ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.

இந்த தொகையை தங்களாலும் தங்களது பெற்றோர்களாலும் கொடுக்க முடியாத சூழல் இருப்பதால் நேபாளத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக அவர்கள் வருந்துகின்றனர். யாரேனும் உதவி செய்தால் உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழகத்திற்கும் தருமபுரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்போம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு தமிழக அரசோ அல்லது வேறு யாரேனும் உதவி செய்தால் தங்கள் வாழ்க்கை மாறும் என அந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திறமை இருந்தும் தகுதி பெற்றும் சாதிக்க முடியாமல் தவிக்கும் இந்த இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவுமா?

News Courtesy : Puthiya Thalaimurai

WHATS YOUR REACTION?

0
0
0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

News

An American bride asked for money from her invitees to be on the ‘exclusive guest list’.

By Jegan Ravichandran | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

7 Pongal release movies of Thala Ajith’s which made an impact in his career

By Salesh Dipak | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

9 years of Siruthai : 7 facts about this superhit cop film

By Salesh Dipak | January 20, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more