நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போதையில் உறங்கிய அரசு மருத்துவர்


தஞ்சை மாவட்டம், திருவையாறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்தவர் மகபூப் பாட்ஷா. இவர் கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பணிக்கு வந்திருந்தார்.

இரவு 10 மணிக்கு வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பணிக்கு வந்தவர் எந்த நோயாளிக்கும் சிகிச்சை அளிக்காமல் தன் ஓய்வறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு உறங்கி விட்டார். இந்நிலையில் விஷம் அருந்தி வந்த ஒருவருக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கும் ஏ.ஆர். பதிவில் மருத்துவரின் கையோப்பம் அவசியமாகும். இதனால் மருத்துவரை கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு எழுப்ப செவிலியர் ஒருவர் முயன்றுள்ளார்.

ஆனால் மருத்துவரோ அந்த செவிலியரை மருத்துவராக பதிவிட அறிவுறுத்தியுள்ளார். அதன் பின் விபத்தில் சிக்கி வந்தவருக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர் மகபூப் பாட்ஷா எழுந்து வராததால் அந்த நோயாளி வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார்.

பணி நேரத்தில் மது போதையில் மருத்துவர் படுத்து உறங்கியதால் அவர் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரனை மேற்கொண்டு வருவதாக மூத்த மருத்துவர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS