சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு


சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் இன்று காலை 7:02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையில் உணரப்பட்டதோடு கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வின் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் சென்னையிலிருந்து தென்கிழக்கே சுமார் 609 கிலோ மீட்டருக்கு தொலைவில் ஆழ்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பதிவிட்டு வருகின்றனர். உறக்கத்தின் போது நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் இதனால் உடனே வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் சென்னை டைடல் பார்க் பகுதியில் நில அதிர்வு நன்றாக உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS