முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்


முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று காலமானார்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 1970-களில் தொழிற்சங்கங்களின் தலைவராக பதவி வகித்தவர். அப்போது தேசிய அளவில் ரயில்வே ஸ்டிரைக்கை நடத்தி பிரமலமானார். ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 1998-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். மேலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவர் எடுத்த எமர்ஜென்சி நடவடிக்கையை வித்தியாசமான முறையில் எதிர்கொண்டார்.

ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டிருக்கும் சர்வதேச சோஷியலிஸ அமைப்பின் ஒரே இந்திய உறுப்பினராக ஜார்ஜ் இருந்துள்ளார். பீஹார் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணிபுரிந்தவர் அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அரசியலில் இருந்து விலகியவர் உடல் நோய்களுடன் போராடி வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக தன் 88 வயதில் இன்று காலை காலமானார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS