‘நீட்’ தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் தகுதி பெறவில்லை


0
1 share

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர் கூட ‘நீட்’ தேர்வின் மூலம் அரசு மருத்துவ கல்லூரியில் சேரும் தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுதிய 1,23,078 பேரில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அரசு பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை. தமிழக அரசு சார்பில் 412 ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்த நிலையில் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் கல்வித்துறை வெளியிட்டுள்ள இந்த தகவல் பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Courtesy : News 18


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format