குஜராத்தில் மால்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை


0
5 shares

மால்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் “வாடிக்கையாளர்களுக்கு 1 மணி நேரம் இலவச பார்க்கிங் வசதி தர வேண்டும், அதற்கு மேல் நிறுத்துவதற்கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் 4 சக்கர வாகனத்திற்கு 30 ரூபாயும் வசூலிக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு எதிராக அகமதாபாத்திலுள்ள ஒரு மால் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் “மால் நிர்வாகம் பார்க்கிங் ஏரியாவுக்கு கட்டணம் விதித்து அதை வியாபார ரீதியாகப் பயன்படுத்துகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் ஏரியாவுக்கு வெளியே நிறுத்துவதால் போக்குவரத்து இடைஞ்சலாகிறது.

குஜராத் நகர வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு சட்டப்படி மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு அதிகாரமில்லை. வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு இடம் அளிப்பதும், பாதுகாப்பு தருவதும் அவர்களின் கடமை” என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

குஜராத் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகமாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்து வருகிறது. சென்னையிலும் இந்த பார்க்கிங் கட்டணங்களை நீக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.


Like it? Share with your friends!

0
5 shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format