சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

7958 Views
By bhuwaneshwaran-g | November 13, 2019

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு உதவி பேராசியர்கள் தான் காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு செய்து வைத்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமென கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடமைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் மாணவியின் கைப்பேசியை ஆராய்ந்த போது அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார். மேலும் இத்துடன் இரண்டு பேராசியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

அந்த கைப்பேசி பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

WHATS YOUR REACTION?

13
8
3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

Happy Birthday Aadhi : 8 facts about this talented actor

By Bhuwaneshwaran G | December 14, 2019
Read more

kollywood, awesome spotlight

Super Star Blockbuster : Enthiran – 7 facts about this blockbuster film

By Salesh Dipak | December 14, 2019
Read more

kollywood, awesome spotlight

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

By Salesh Dipak | December 14, 2019
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

7 facts about former adult star Mia Khalifa

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more

Deepa to file a case against A.L Vijay’s Thalaivi starring Kangana Ranaut as Jayalalitha

Read more

Hyderabad police encounter : More details about the incident

Read more

Happy birthday Shalini : 7 facts about this versatile actress

Read more

19 years of Snegithiye : 7 facts about this cult the thriller

Read more