இணையதள முடக்கத்தில் இந்தியா முதலிடம்


உலக நாடுகளில் இணையம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. கல்வி, மருத்துவம் அறிவியல், வேலை வாய்ப்பு என பல தேவைகள் இணையதள சேவையின் மூலம் சுலபமானது. இந்நிலையில் இணையதள சேவை அதிகம் முடக்கப்பட்டதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இனையதளங்கள் மூலம் அதிக அளவில் போராட்டம் முன்னேடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் வலுப்பெறும் நேரத்தில் இணையதள சேவையை மத்திய அரசு முடக்கிவிடும்.

இதில் இந்தியாவின் ஜம்மூ காஷ்மீரில் மட்டும் அதிகபட்சமாக 2018-ல் 112 முறை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ராஜஸ்தானில் 56 முறை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், பீகார், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தெலுங்கானாவில் கடந்த 5 வருடத்தில் இரண்டு முறை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் காவல் துறையினர் சுட்டதில் 14 பேர் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 2012 முதல் 2018 அக்டோபர் வரை 259 நிகழ்வுகளை குறிப்பிட்டு இணையதள சேவை முடக்கப்பட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS