7 மணி நேர கொலைவெறி தாக்குதல் – அடித்தே கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞர்


5
2 shares, 5 points

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரெஸ் அன்சாரி. இவர் கடந்த வாரம் 18-ம் தேதி தன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது ஒரு கும்பல் இவரை கடுமையாக தாக்கியது. அந்த கும்பல் இவரைத் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அன்சாரி ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதாகக் கூறி அவரை மரத்தில் கட்டிவைத்து 11 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. சுமார் 7 மணி நேரம் வரை அந்தக் கும்பல் அன்சாரியை தாக்கியுள்ளது. இதற்திடையே அவரை ‘ஜெய் ஶ்ரீராம்’ என சொல்லும்படியும் அந்த கும்பல் வற்புறுத்தியுள்ளது. இறுதியாக அன்சாரி மயங்கிய நிலையில் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட அன்சாரி கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனி ஒருவரை 11 பேர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அன்சாரியை தாக்கிய அந்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரின் உறவினர்களும் நண்பர்களும் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து கர்சவான் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், “நாங்கள் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். அன்சாரியின் உறவினர்கள் சில கடைக்காரர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் இல்லாமல் அன்சாரியைத் தாக்கிய 11 பேரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளார்.

சமீப காலமாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நம் நாடு மதசார்பற்ற நாடு என கூறப்படும் நிலையில் இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் பலரது மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Like it? Share with your friends!

5
2 shares, 5 points

What's Your Reaction?

Angry Angry
23
Angry
Cute Cute
1
Cute
WTF WTF
1
WTF
Love Love
2
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format