கோடநாடு மர்மமும் அதன் பின்னணியும்…..


தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தன் பெரும்பான்மை பலத்தை அ.தி.மு.க. நிருபித்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா பொறுப்பேற்றார். பின், 2016 செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். இதனையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்-க்கும் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கும் மோதல் மூண்டது. பின் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக 2017 பிப்ரவரியில் சசிகலா பொறுப்பேற்றதை தொடர்ந்து தன் முதல்வர் பதவியை இராஜினாமா செய்த ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்திற்கு எதிராக தனி அணியாக பிரிந்தார். பின் கூவத்துரில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்துவைக்கப்படது, சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக சசிகலா பெங்களூர் சிறையில் அடைத்தது, அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றது என பல அரசியல் திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வு நாட்களை செலவழிக்கும் மலை பங்களாவான “கோடநாடு பங்களாவில்” கடந்த ஏப்ரல் 24 2017ல் நடந்த கொள்ளை சம்பவமும்..அதனை தொடர்ந்து சில தினங்களில் அதில் தொடர்புடைய ஐந்து நபர்களின் மர்ம மரணமும் பெரும் பரபரப்புக்குள்ளானது. தற்போது அந்த கொள்ளை சம்பவத்தில் 2வது மற்றும் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மனோஜ் மாற்று சயன் இருவரிடமும் பேட்டி கண்டு “கோடநாடு மர்மம்” தொடர்பான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தெஹெல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல். அந்த ஆவணப்படத்தில் சயன் மற்றும் மனோஜ் இருவரும் “இந்தக் கொலை மற்றும் கொள்ளையின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும்…அவர் கேட்டுக்கொண்டதன் பெயரில் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் உடன் இணைந்து கோடநாடு பங்களாவில் இருந்த பல முக்கிய ஆவணங்களை திருடியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்”. கடந்த ஜனவரி 11 ல் டெல்லியில் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு மேத்யூஸ் சாமுவேல் உடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினர் மனோஜ் மற்றும் சயன்.

இதனை தொடர்ந்து மனோஜ் மற்றும் சயனை டெல்லியில் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.அவர்களை நீதிபதி முன் ஆஜர் செய்தனர். ஆனால் அவர்களை ரிமாண்ட செய்ய மறுப்பு தெரிவித்து 18ஆம் தேதி ஆஜர் ஆக உத்தரவிட்டார் நீதிபதி சரிதா. “குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவி விலக வேண்டும்” என பிற கட்சியினர் குரல் எழுப்பி வரும் நிலையில் ,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை எப்படி கையாள உள்ளார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

SHARE YOUR THOUGHTS

More From: General

DON'T MISS