மாயமான இந்தோனேசிய விமானம் – கடலில் விமானம் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்கள்


நேற்று இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் விமானம் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா விமான நிலையத்திலிருந்து லையன் ஏர் விமானம் நேற்று காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதியை நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 3 குழந்தைகள் மற்றும் விமான பணியாளர்கள் 8 பேர் உட்பட மொத்தம் 188 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலும் இழந்தது. இதனையடுத்து விமானத்தின் சிக்னலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

 

இந்நிலையில், டேன்ஜுங் பிரியோக் துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் விமானம் ஜாவா கடலில் விழுந்ததை கண்டதாக இந்தோனேசியாவின் வானொலி தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவுக்கு விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 – மேக்ஸ் ஜெட் வகையை சேர்ந்தது. மேலும், இந்த வகை விமானம் அறிமுகமான ஒரு ஆண்டிலேயே விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில் விமானத்தை இயக்கியது டெல்லியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

தற்போது விமானம் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS