“பிறப்பால் பெற்ற நல்லொழுக்கத்தால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” – மக்களவை சபாநாயகர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு


தியாகம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட நல்லொழுக்கங்களால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என மக்களவை சபாநாயகர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிராமணர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஓம் பிர்லா கூறியதாவது: “மற்ற சமுதாயப் பிரிவினர்களை பிராமணர்கள் எப்போதும் வழி நடத்தி வருகிறார்கள். நாட்டில் அவர்களுக்கு எப்போதும் வழிநடத்திச் செல்லும் பணி இருந்துள்ளது. சமூகத்தில் கல்வி மற்றும் மதிப்பீடுகளை கற்றுக் கொடுப்பவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். இன்றளவும், ஒரு பிராமணர் குடும்பம் மட்டும் கிராமத்தில் இருந்தால் அவர்களது தியாகம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட நல்லொழுக்கங்களால் பிராமணர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

பிறப்பால் பெற்ற நல்லொழுக்கத்தால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் அந்த நிகழ்ச்சியில் கூறினார். மேலும் இது தொடர்பாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

அதில் “பிராமணர்கள் சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்ட குணங்களால் அவர்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர். அதனால் தான் பிராமண சமூகத்தினர் வழிகாட்டும் பணியை மேற்கொள்கின்றனர்” என்று பதிவிட்டிருந்தார். ஓம் பிர்லா கூறிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பிறப்பின் நல்லொழுக்கத்தால் பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். இது சமத்துவமற்ற இந்தியாவின் சாதிய மனநிலையை காட்டுகிறது. நீங்கள் பிராமணர் என்பதால் நாங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தவில்லை. மக்களவை சபாநாயகர் என்பதால் தான் மதிக்கிறோம்” என கபில் சிபில் பதிவிட்டுள்ளார்.

இதே போல் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி தன் ட்விட்டர் பக்கத்தில் “சாதியை கொண்டாடும் இந்த மனநிலையானது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, மிகவும் அசிங்கமானதும் கூட. இவரை போன்ற ஒருவர் மக்களவை சபாநாயகராக இருப்பது வேடிக்கையான ஒன்று. பிராமணர்கள் குறித்த தன்னுடைய பேச்சுக்காக ஓம் பிர்லா மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் கருத்தை கண்டித்துள்ள சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் குஜராத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஓம் பிர்லாவின் கருத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாட்டில் உள்ள எந்தவொரு பிரிவினரையும் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என கூறுவது மற்றும் ஒரு தரப்பினரை ஆதிக்கமுடையவர்களாக ஆக்குவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கு எதிரானது. அவரது இந்த பேச்சு மற்ற சமுதாயத்தினருக்கு தாழ்வு மனப்பான்மை எற்படுத்தும். சாதியத்தையும் ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளது.


Like it? Share with your friends!

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format