மம்தாவின் தர்ணா போராட்டம் : சிபிஐ-க்கு கொல்கத்தா காவல்துறை தரப்பில் சம்மன்


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது இல்லத்திற்கு சென்ற போது கொல்கத்தா காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன் பின் சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு முதல் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். மேலும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் மத்திய அரசு கூட்டாட்சி அமைப்பை சிதைக்க முனைவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க சென்ற விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் பங்கஜ் ஶ்ரீவத்சவா நேரில் ஆஜராக கொல்கத்தா காவல்துறை தரப்பில் சம்மன் தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ இணை இயக்குனர் பங்கஜ் ஶ்ரீவத்சவா சிபிஐ அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையே மம்தா பானர்ஜியின் போராட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS