“மாஞ்சா நூலுக்கு எங்கள் மகனின் மரணமே கடைசியாக இருக்கட்டும்” – சென்னையில் மாஞ்சா நூலால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் பெற்றோர் உருக்கம்

855 Views
By bhuwaneshwaran-g | November 5, 2019

மாஞ்சாவால் இனிமேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே மகன் அபினேஷ் சரவ். கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கோபால் பைக்கில் வந்த போது பைக்கின் முன்னால் அமர்ந்திருந்த அவரின் மகன் அபினேஷ் சரவ், “அப்பா வலிக்கிறது” என்று கூறியபடி பெட்ரோல் டேங்க் மீது சரிந்தான்.

உடனே பைக்கை நிறுத்திய கோபால் அபினேஷை பார்த்த போது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. அதிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனால் கோபாலும் சுமித்ராவும் கதறிய நிலையில் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அபினேஷ் சரவ்வை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அபினேஷ் சரவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதியில் மாஞ்சா நூல் விட்டது யாரென்று விசாரணை நடத்திய போலீசார் கொருக்குப்பேட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த நாகராஜ், 15 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூலையும் பறிமுதல் செய்துள்ளனர்.

“நாங்கள் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மேம்பாலத்தில் திடீரென நூல் ஒன்று பறந்து வந்தது. பைக்கின் முன்னால் அமர்ந்திருந்த மகனின் கழுத்தில் நூல் சிக்கியதும் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. வலியால் அபினேஷ் கத்தினான். பைக்கை நிறுத்துவதற்குள் மயங்கி விட்டான். எங்கள் மகனின் மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சா நூலுக்கு எங்கள் மகனின் மரணமே கடைசியாக இருக்கட்டும்” என போலீசாரிடம் குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அந்தந்த பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். தடையை மீறி மாஞ்சா நூல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது. இதை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாஞ்சா நூல் 3 வயது குழந்தையின் உயிரை பறித்துள்ளது. மாஞ்சா நூல் பயன்படுத்தியதால் உயிரிழப்பு சம்பவங்களும் விபத்துகளும் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த 2006 முதல் இது வரை 9 பேர் மாஞ்சா நூலினால் உயிரிழந்துள்ளனர்.

WHATS YOUR REACTION?

0
0
1
1

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

Happy birthday Ashwin Saravanan : 7 facts about this promising director

By Salesh Dipak | November 22, 2019
Read more

kollywood, awesome spotlight

5 years of Naaigal Jaakirathai : 7 facts about this thriller film

By Salesh Dipak | November 22, 2019
Read more

News

Vellore 11th Grade Student uses Hydrogen for petrol : Plan to display at the National design and research forum

By Jegan Ravichandran | November 22, 2019
Read more

Trending

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

Happy birthday Shalini : 7 facts about this versatile actress

Read more

Shocking incident in Chennai : Hostel cook caught shooting videos of women taking bath

Read more

12 years of Polladhavan : 7 facts about this bike film

Read more

Five Best places in Madurai where we get tasty food

Read more

Santhanapara People paid their respects to two year old jovana killed by her mother and partner : A Heartbreaking incident in kerala

Read more

“சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத் தெரியாத பெண்.. தூக்குக் கயிறு நெரிப்பதை எப்படி எதிர் கொண்டாள் என்று தெரியவில்லையே?” – தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் தாய் உருக்கம்

Read more

18 years of Aalavandhan : 7 facts about this cult film

Read more

2 years of Theeran Adigaram Ondru : 7 facts about this blockbuster action film

Read more

மனைவி கண் முன்னே பாராசூட்டில் இருந்து விழுந்து கணவர் உயிரிழப்பு : தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Read more