நா.முத்துகுமார் என்ற பேரன்பு கவிஞர்


-1
1 share, -1 points

சோர்வின் விளிம்பில், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில், பாசத்தின் தேடலில், காதலின் தோல்வியில் எப்போதும் என்றும் நம்மோடு உறவாடி, உணர்வால் வருடிக் கொடுக்கும் பல பாடல்கள் நம் அலைபேசியில் அடைப்பட்டு கிடைந்தாலும், சில கவிஞர்களின் வரிகள் மருத்துவத்தின் உச்சமாய் நம் மனதை ஆற்றிடும். அச்சில கவிஞர்களுல், காற்றில் கலந்து நம் செவிகளில் நுழைந்திடும் நா.முத்துகுமார் என்ற பேரன்பு கவிஞனை நினைத்தாலே இனித்திடும்.

காஞ்சிபுரத்தில் பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்து , மூன்றரை வயதில் தன் தாயை இழந்து , தகப்பனின் அரவணைப்பில், சிறு வயதிலேயே புத்தக காட்டினில் துலைந்தார். “என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாக சொல்லித்தரவில்லை.அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.” என்ற மார்க்வெஸ் வரிகள் தான் அவரின் தாரகமந்திரம். நினைவுச்சுழலில் நீச்சல் பழகி, அச்சிறுவயதிலேயே அருவி, ஆக்காட்டிக் குருவி, ஆரஞ்சு மேகம் என்றெல்லாம் கவிதை எழுதியவர். பள்ளி கல்வி முடித்து , இளங்கலை இயற்பியல் படித்து , பின் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் படித்தார்.

தமிழ் மீது அவருக்கு இருந்த தீராக்காதல் அவரை பிஹெச்டி வரை கொண்டு சென்று, “தமிழ் திரைப்பட பாடல்களை” பற்றி ஓர் ஆய்வை செய்ய வைத்தது. பழங்கால பாடலாசிரியர்கள் தொடங்கி நிகழ்கால பாடலாசிரியர்கள் வரை அனைவரின் புத்தகங்களும் அவர் அறையை நிறைத்தது. படிப்பு முடிந்ததும் பத்திரிகையாளராக சில காலம் பணியாற்றி, பின் அவர் அதிகம் ரசித்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பல கவிஞர்களின் செல்லப்பிள்ளையாய் வலம் வந்த அவர், 2000 ஆம் ஆண்டு தன் முதல் படத்தில் பாடலாசிரியராக சினிமாவில் தடம் பதித்தார்.

நாட்கள் நகர அவரின் வரிகள் பட்டிதொட்டியெங்கும் பரவத் தொடங்கியது. 7ஜி ரெயின்போ காலனியில் அவரின் கண் பேசும் வார்த்தைகள் அத்தலைமுறை இளைஞர்களின் சுப்ரபாதம். அன்றும் என்றும் காதலர்களின் உள்ளம் கவர்ந்த கவிஞன், இசையை மட்டுமே ரசிக்க தெரிந்த ரசிகனுக்கு, அதனுள் இருக்கும் பாடல் வரிகளையும் ரசிக்க சொல்லிக் கொடுத்தவர். கிராமத்தின் நினைவுகளில் அவர் எழுதிய “வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி” என்ற பாடல் வயது வரம்பின்றி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

பசுமை கலந்த பாலைவனத்தின் உச்சக்கட்டமாய் “பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய்” என்ற பாடல் இளைஞர்களை கண்ணீர் கடலுக்குள் மூழ்கடித்தது. தந்தைகென்று ஓர் தாலாட்டு பாட்டு “ஆனந்த யாழை மீட்டியபடி”. மகளுக்கும், தந்தைக்குமான உறவை தாளில் வடித்து இசையால் வருடவைத்தார்.

அவரின் ஒவ்வொரு பாடல்களும் ஒருவிதம் அத்தனையும் தனிரகம். ஏதாவது எதிர்பாராத தருணத்தில் நம் மனதை தேற்றிடும் பல பாடல்களுக்கு அவர்தான் சொந்தக்காரர். வானம் தாண்டி நம் மனதை வசப்படுத்தும் கவிஞன். அவர் வடித்த பாடல்களின் ஒவ்வொரு எழுத்திலும் பேரன்பின் உச்சமாய் அவர் இன்றும் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.


Like it? Share with your friends!

-1
1 share, -1 points

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
4
Love
Praveen Rcf

Praveen is an amazing person who manages the overall activities of the brand Awesome Machi. He is an engineer by degree but also has thorough knowledge about the Social Media functioning. He is a strong ground in languages Tamil. we wish one day he becomes a Tamil script writer. You can reach Praveen at praveen@awesomemachi.com

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format