நீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை – அகில இந்திய அளவில் 7-வது இடத்தை பிடித்தார்


எம்.டி., எம்.எஸ். மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் தஞ்சையைச் சேர்ந்த செரின்பாலாஜி அகில இந்திய அளவில் 7-வது இடத்தை பிடித்தார். செரின்பாலாஜி சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இவரின் தந்தை பன்னீர் மற்றும் தாயார் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் தஞ்சை அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பேராசியர்களாக பணியாற்றி வருகிறார்கள். செரின்பாலாஜி கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தற்போது சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வரும் செரின்பாலாஜி இந்த ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதியுடன் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்ய உள்ளார். அடுத்ததாக எம்.டி. படிக்க நீட் தேர்வை எழுதியுள்ளார்.

செரின்பாலாஜி இந்திய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை தமிழக அரசு மார்ச் மாதம் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS