உத்தரப்பிரதேச மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை நாய் கடித்துக் கொன்ற கொடூரம் : ஊழியர்களின் அலட்சியத்தால் விபரீதம்

701 Views
By bhuwaneshwaran-g | January 14, 2020

ஊழியர்களின் அலட்சியத்தால் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த நாய் ஒன்று பிறந்த குழந்தை ஒன்றை கடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சதர் கோட்வாலி தனியார் மருத்துவமனையில் ரவிக்குமார் என்பவர் தன் மனைவி காஞ்சானாவை நேற்று பிரவசத்திற்காக அனுமதித்திருந்தார். அங்கு அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் சி பிரிவு ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக மருத்துவ ஊழியர்கள் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் காஞ்சனாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து காஞ்சனா வார்டு பகுதிக்கு மாற்றப்பட்டார். ஆனால் குழந்தையை பின்னர் மாற்றுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வெளியே இருந்து ஒரு நாய் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது. இதை மருத்துவமனை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதன் பின் அந்த நாய் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றது. பின் ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே ஒரு நாயை விரட்ட மருத்துவமனை ஊழியர்கள் முயற்சிப்பதை குடும்ப உறுப்பினர்கள் பார்த்துள்ளனர்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து ஒரு நாய் மருத்துவமனை ஊழியர்களை விலக்கிக்கொண்டு செல்வதை தாங்கள் கவனித்ததாகவும் அதனைஅடுத்து பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவும் தங்களிடம் கூறப்பட்டதாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாய் வார்டு பகுதிக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது கழுத்து மற்றும பிற பாகங்களில் காயங்களுடன் தரையில் இறந்து கிடந்த குழந்தையைத்தான் அவர்கள் காணும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் மன்வேந்திர சிங் எஃப்.ஐ.ஆருக்கு உத்தரவிட்டுள்ளார். தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) சந்திர சேகர் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சம்பவம் நடந்த மருத்துவமனை பதிவு செய்யப்படாதது எனவும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்கு குழந்தையின் உடல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மோஹித் குப்தா மற்றும் பிரசவத்தின்போது உடனிருந்த சில ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாயின் கருவறையில் இருந்து இந்த உலகிற்கு வந்த குழந்தை மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் 2 மணி நேரம் கூட உயிருடன் இல்லை. இந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

WHATS YOUR REACTION?

0
2
7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

News

An American bride asked for money from her invitees to be on the ‘exclusive guest list’.

By Jegan Ravichandran | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

7 Pongal release movies of Thala Ajith’s which made an impact in his career

By Salesh Dipak | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

9 years of Siruthai : 7 facts about this superhit cop film

By Salesh Dipak | January 20, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more