நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்


0
93 shares

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் சிக்கிய நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த வருடம் மார்ச் மாதம் 13-ம் தேதி கைப்பேசியில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகாரில் பேராசிரியை கடந்த வருடம் மார்ச் மாதம் 19-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசிய இந்த ஆடியோ நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவிக்கு போதிய சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் சுகந்தி தெரிவித்தார். அப்போது, நிர்மலாதேவி வழக்கில், காவல்துறையின் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டறிந்த நீதிபதிகள், பேராசிரியை நிர்மலாதேவியின் மனநிலை மற்றும் அவரது வழக்கின் போக்கு குறித்து அறிந்து கொள்ள, இன்று அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன் வந்த விசாரணையில், உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டு. வழக்குக்கு இடையூறு ஏற்படும் நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


Like it? Share with your friends!

0
93 shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format