உ.பி (கிழக்கு) மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகிறார் பிரியங்கா காந்தி


ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி இது வரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில், நாடளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து மாநில தேர்தலில் முன்னேற்றம் கண்டுள்ளதைத் தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த வெற்றியைத் தக்க வைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் 80 தொகுதியைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் பெரும் பங்காற்றுகிறது.மேலும் உ.பி.யில் அகிலேஷ் கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை என்பது உறுதியான பின்பு நாடாளுமன்றத் தேர்தலினைத் தனியாக எதிர்கொள்ள வியூகங்களை வகுத்து வருகிறது காங்கிரஸ்.இதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தின் தேர்தல் பணிகளைக் கவனிக்க பிரியங்கா காந்தியை பொதுச் செயலாளர் ஆக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.பிப்ரவரி முதல் வாரம் அவர் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆட்சியை அகற்ற முனைப்புடன் செயல்பட்டுவரும் காங்கிரஸ் கட்சிக்கு..அகிலேஷ்,மாயாவதி கூட்டணியில் இடம் கிடைக்காததால் சற்று பின்னடைவு அடைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில்.பிரியங்கா காந்தி பொதுச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்ட செய்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.தேர்தல் முன்னேற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர் தொண்டர்கள்.ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இருக்கையில்,பிரியங்கா காந்திக்கு இப்பதவி வழங்கப்பட்டது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

SHARE YOUR THOUGHTS

More From: General

DON'T MISS