பாலியல் குற்றங்களுக்கு சீனாவில் மரண தண்டனை, சவுதி அரேபியாவில் தலை துண்டிப்பு, ஆனால் இந்தியாவில்? : பாலியல் குற்றங்களுக்கு மற்ற நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள்


0
767 shares

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்தியாவவை பொறுத்தவரை பாலியல் வன்கொடுமை என்பது புதிதல்ல. நிர்பயாவில் தொடங்கி தற்போது பொள்ளாச்சி சம்பவம் வரை தினம் தினம் பல செய்திகளை நாம் கடந்து வந்துள்ளோம். நம் நாடு எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற, வாழ தகுதியற்ற நாடாக நம் நாடு இருப்பது வேதனையின் உச்சம்.

நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முக்கிய காரணம் இங்கு கடுமையான சட்டம் இல்லை. மற்ற நாடுகளில் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இருக்கிறது. அப்படி மற்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் இதோ:

சீனா : நம் நாட்டை போலவே மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் சீனா பெரிய நாடு. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள் ஊழல்கள் எல்லாமே குறைவு. குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் காமுகர்களுக்கு ஆண்மையும் நீக்கப்படும்.

ஈரான்: ஈரான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படிப்பட்ட கடுமையான தண்டனைகள் இருந்தால் இம்மாதிரியான குற்றங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக் கொல்லப்படுவார்கள். அதே நேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதி விசாரணைக்கு பின்னரே மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரான் அரசாங்கம் கூறுகிறது.

ஆஃப்கானிஸ்தான் : ஆஃப்கானிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து 4 நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள்.

ஃபிரான்ஸ்: ஃபிரான்ஸ் நாட்டில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனல இல்லை. ஆனால் குறைந்தது 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே கழிக்கும் அளவுக்கு தண்டனைகள் கொடுக்கப்படும்.

வடகொரியா : வடகொரியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்கப்படும். குற்றவாளிகள் நெற்றியில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.

அமெரிக்கா: அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய தண்டனை கிடைக்கும். 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஒருவருக்கு அமெரிக்க அரசு வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய தண்டனை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா: உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை வரவழைக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் தலையை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிவிடுவார்கள்.

இப்படி பல நாடுகளில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை இருக்கும் நிலையில் இந்தியாவில் கடுமையான சட்டங்கள் எதுவும் இல்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும் ஓட்டைகள் நிறைந்ததாகவும் உள்ளது. குற்றவாளிகள் எவ்வித அச்சமும் இன்றி தவறு செய்வதற்கு முக்கிய காரணம் இங்குள்ள சட்டம் தான். குற்றவாளிகள் அதிகார பலத்தாலோ சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்து எளிதில் தப்பித்து விடும் அவலம் இங்கு நிகழ்கிறது. அதனால் குற்றங்கள் செய்ய பலரும் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருப்பதால் தான் அங்கு குற்றங்களும் குறைவாக உள்ளது. எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ அங்கு தான் குற்றங்கள் குறைவாக இருக்கும். கடுமையான தண்டனைகள் மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.


Like it? Share with your friends!

0
767 shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format