பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்ற குற்றவாளி : ஜாமினில் வெளியே வந்து புகார் அளித்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்

2665 Views
By bhuwaneshwaran-g | December 4, 2019

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஜாமினில் வெளியே வந்து அந்த சிறுமியை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. பாலியல் குற்றவாளிகளை அடித்தே கொல்ல வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் ஜாமினில் வெளியே வந்து புகார் அளித்த சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவக்குமார் என்ற 19 வயது இளைஞர் கைதானார். கடந்த 10 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த அவர் தான் சிறை செல்ல காரணமாக இருந்த சிறுமி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையை தினமும் கண்காணித்த சிவக்குமார் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்துள்ளார். தனியாக இருந்த சிறுமியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த போது சிவக்குமார் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியை வன்கொடுமை செய்யும் காமுகன்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்குவது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் 30 இடங்களில் கத்தி குத்து காயம் இருந்ததாக கூறியுள்ளனர்.

WHATS YOUR REACTION?

0
7
12

1 Comment

Join the Conversation

  1. Pls kill them… 1st of all how can they give jamin to these kind of people.. Pls change the laws according to the suituations… Punishments for these kind of criminals in India should be death. We should change the law… If Dr.ambedkar is here in this suituation he ll also change the law.. Pls make India as a loyal country.. Dont kill Dr. Ambedkar by giving jamins and making them(rascals) still alive.. Present suituation of india, there is no safety for any women( any from the babies till the ladies) .. This is a big shame… Pls take any severe actions for these kind of criminals..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

kollywood, awesome spotlight

14 years of Dishyum : 7 facts about this romantic film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

8 years of Marina : 7 facts about this children film

By Salesh Dipak | February 3, 2020
Read more

kollywood, awesome spotlight

Dhanush’s exciting lineup of films for 2020-21 : Details inside

By Salesh Dipak | February 3, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more