அயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று


0
1 share

50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், 60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், 5 முறை தமிழக முதல்வர், 12 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்… என நீண்ட நெடிய பட்டியல்.. இப்படி அயராது உழைத்த இந்த சூரியன் இந்த மண்ணில் உதித்த நாள் இன்று.

தன்னுடைய 14 வயதிலேயே மாணவப் பருவத்தில் முரசொலியை துண்டுப் பிரசுரமாக வெளியிட்ட நாளிலிருந்து ஏறத்தாழ 80 ஆண்டுகளாக சமூகப் பணியாற்றியவர், பத்திரிக்கையாளராகத் தொண்டர்களுக்குத் தினமும் கடிதங்கள், கேள்வி- பதில்கள் நிறைய எழுதியவர். 74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு, தொல்காப்பியத்துக்கு உரை, திருக்குறளுக்கு உரை, சிலப்பதிகாரத்தை நாடகமாகவும் சினிமாகவும் அரங்கேற்றியது, நாடகங்களில் நடித்தது ஏன வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கலைஞர்.

குடிசை மாற்று வாரியம், கைரிக்‌ஷா ஒழிப்பு, கண்ணொளி வழங்கும் திட்டம், தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழங்களை உருவாக்கியது, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது, மாவட்டம் தோறும் ஆரம்ப சுகாதாரம், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, சமத்துவபுரம், உழவர் சந்தை உருவாக்கியது என இன்னும் பல சாதனைகளை குறிப்பிடலாம்.

ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம்,.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியலில் இருந்தவர் கலைஞர். ஆனால் அத்தனை முதல்வர்களிடமும் காணக்கிடங்காத ஒரு சிறப்பு கலைஞரிடம் உண்டு. அது தான் தமிழ் மொழியின் மீது அவர் கொண்ட காதல்.

“இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அக்டோபர் 13, 1957-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசியவர் கலைஞர்.

சி.என் அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின் போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பிய போது அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். “அப்போது தான் தமிழ் எழுத்துக்கள் அந்த தபால்தலையில் இருக்கும்” என கூறினார் கலைஞர்.

மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970-ல் கலைஞர் ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பயன்பட்டது.

தமிழ்த்தாயக்கு உருக்கொடுக்கும் நிகழ்வை முன்னெடுத்ததும் கலைஞரே. தமிழ்த்தாய்க்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்ற கம்பனடிப்பொடி கா.கணேசன் அவர்களது நெடுநாள் கனவை நனவாக்கும் வகையில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் 1975 ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து பணிகள் நடைபெற்றன. இதையடுத்து தமிழ்த்தாய்க் கோயில் 1993-ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று கலைஞரால் திறக்கப்பட்டது.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டமும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கலைஞர் தான். இயல், இசை, நாட்டியம் எனும் முத்தமிழ் கலைகளை வளர்க்க ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் மறக்கடிக்கப்பட்ட பழந்தமிழர் கலைகளுக்குப் புத்துயிர் கொடுத்தவர் கலைஞர்.

இப்படி அயராது உழைத்த கலைஞர் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டு 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6-10 மணியளவில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார். 90 வயதை கடந்த பிறகும் சிறிதும் உற்சாகம் குறையாமல் தன் அன்றாட அலுவல்களிலும் தீவிரமாக இருந்ததோடு தமிழுக்காகவும் தமிழகத்திற்காகவும் அயராது உழைத்த கலைஞரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
1
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format