வீரத்தின் அடையாளமாய் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று


வியாபார நோக்கில் இந்தியாவிற்குள் நுழைந்து நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டமொம்மனின் பிறந்தநாள் இன்று. ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமகத்தமாளுக்கும் பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது பூர்வீகம் ஆந்திராவில் உள்ள பெல்லாரி என்றாலும் தன் வாழ்நாள் முழுவதும் தமிழனாகவே இவர் வாழ்ந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், 5 குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம், என்ற 2 சகோதரர்களும் ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற 2 சகோதரிகளும் இருந்தனர். வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்த கட்டபொம்மன் அவருக்கு 30 வயதாகும் வரை தந்தைக்கு உதவியாக இருந்தார். பின்னர், பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் ஆண்டில் , 47-வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பேற்றார் கட்டபொம்மன். 9 ஆண்டுகள், 8 மாதம் அரசுப் பொறுப்பிலிருந்த கட்டபொம்மனுக்கு குழந்தைகள் இல்லை. தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழ்நாட்டை ஆள நினைத்த வெள்ளையர்களை கதிகலங்க வைத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கி.பி.1797-ம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தான்.

1797 -1798 காலக்கட்டத்தில் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்றுப்போனான். இதையடுத்து ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனை சந்திக்க அழைப்பு விடுத்தான். வீரபாண்டிய கட்டபொம்மனை அவமானப்படுத்த எண்ணிய ஜாக்சனுக்கு சரியான பாடத்தை புகட்டினார் கட்டபொம்மன். “வரி, வட்டி, திறை, கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்கு பெண்களுக்கு மஞ்சளரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே. யாரைக்கேட்கிறாய் வரி, எவரை கேட்கிறாய் வட்டி?”, என வரி கேட்டு வந்த ஜாக்சனிடம் வீர முழக்கமிட்டார் கட்டபொம்மன்.

அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். தான் இறக்கும் வரை வீரனாக வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனை மரத்தடியில் விசாரணை நடத்தி குற்றவாளி என்று பழி சுமத்தினான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்கவும்.இல்லை, உயிர்ப்பிச்சையும் கேட்க வில்லை. தன் தாய் மண்ணைக் காப்பதற்காகவே வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்தேன் என்று முழங்கியவாறு தூக்குமேடை ஏறினார் கட்டபொம்மன். தூக்கு மேடை ஏறியபோதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார் கட்டபொம்மன். ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டில் கயத்தாறு கோட்டையிலே ஒரு ஒரு புளிய மரத்திலே தூக்கிலிடப்பட்டார் கட்டபொம்மன், அப்போது அவருக்கு வயது 39 மட்டுமே.

தன்வாழ்நாள் முழுவதும் வீரனாய் வாழ்ந்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் என்றென்றும் போற்றுதலுக்குரியது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS