நஷ்டமடைந்த திரைப்படம் – ரூ.40 லட்சம் சம்பளத்தை விட்டுக் கொடுத்த சாய் பல்லவி


மளையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகை சாய் பல்லவிக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக இவர் நடித்த ‘மாரி-2’ கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹனுராகவபடி இயக்கத்தில் ஷர்வானத் – சாய்பல்லவி ஆகிய இருவரும் நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

நடிகை சாய்பல்லவி நடித்த ‘மாரி-2’ திரைப்படத்தின் காட்சி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதோடு வசூலும் ஈட்டவில்லை. 22 கோடி ரூபாய்க்கு வியாபாரமான இந்த திரைப்படம் வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியது. மேலும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

நடிகை சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ திரைப்படத்தின் காட்சி

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சாய்பல்லவிக்கு கொடுப்பதாக இருந்த சம்பள பணத்தில் ஒரு பகுதி படப்பிடிப்புன் போது சாய்பல்லவிக்கு முன்பணமாக கொடுக்கப்பட்டது. முழு சம்பளத்தையும் திரைப்படம் வெளியான பிறகு தருவதாக சாய்பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது 40 லட்சம் ரூபாய் சம்பள பணத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்தார்.

நடிகை சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ திரைப்படத்தின் காட்சி

ஆனால் நடிகை சாய்பல்லவி அதை வாங்க மறுத்துவிட்டார். திரைப்படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தை அவர் விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது. நடிகை சாய்பல்லவியின் செயலை தெலுங்கு திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Spotlight

DON'T MISS