சர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்


சர்கார் கதை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் வருண் இராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்ப்பட்டுள்ளது.

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் இராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் செங்கோல் என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கி உள்ளதாகவும் இந்த கதையை அவர் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், சர்கார் படத்தின் கதை மற்றும் கதையின் கரு தன்னுடையது என்பதால் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வாதிட்டார். அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் மற்றும்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை நேரில் காண ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்கியராஜ் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிச்சர்ஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் இராஜேந்திரனுடன் சன் பிச்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அடுத்த 1 மணி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தான் வருண் இராஜேந்திரன் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் உடனான சமரசத்தை ஏற்றுக்கொள்கிறாரா என்று தெரியவரும்.

மேலும் படத்தின் டைட்டில் கார்டில் தன் பெயரை போட வேண்டும் என்றும் இழப்பீடாக ரூ.30 இலட்சம் கொடுக்கவேண்டும் என்றும் வருண் இராஜேந்திரன் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS