எஸ்.பி.ஐ. வங்கியின் ஏடிஎம்-ல் பணம் இல்லாததால் எஸ்பிஐ-க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்


பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.-ல் சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச மாத இருப்பு தொகையாக மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்புறங்களில் 3000 ரூபாய், நடுத்தர நகரங்களில் 2000 ரூபாய், கிராமப் புறங்களில் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இந்த தொகையை தங்கள் வங்கி கணக்கில் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஜி.எஸ்.டி. இல்லாமல் அபராதமாக வசூலித்து வந்தது எஸ்பிஐ.

பொதுத்துறை வங்கிகள் கடந்த 42 மாதங்களில் மட்டும் தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதமாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்-ஐ பயன்படுத்தியதற்கான கட்டணமாகவும் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக மக்களவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக மற்றொரு வங்கியின் வாடிக்கையாளர் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம்-ல் பணம் இல்லாததால் பணம் எடுக்காமல் வாடிக்கையாளர் திரும்பி சென்றுள்ளார். தொடர்ந்து இதே போல் வெவ்வேறு 3 நாட்களில் எஸ்பிஐ ஏடிஎம்-ல் பணம் இல்லாததால் கோபமடைந்த வாடிக்கையாளர், ராய்ப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்த போது எஸ்பிஐ வங்கித் தரப்பில், இணையதள சேவையில் ஏற்பட்ட தடங்கல் தான் பணம் வராததற்கு காரணம் எனவும் இதற்கு இணையதள சேவை வழங்கும் நிறுவனம் தான் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் இல்லை என்பதால் அவர் தங்கள் வங்கிச் சேவையின் வரம்புக்குள் வரமாட்டார் எனவும் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் “3 வெவ்வேறு தினங்களில்’ பணம் இல்லை என்று ஏடிஎம் காண்பித்துள்ளது. உங்கள் வாதத்தின்ப் படி இணையதளச் சேவையில் தடங்கல் என்றால், எப்படி ஏடிஎம் அவ்வாறு காட்டும்?. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காவிட்டாலோ அல்லது அந்தத் தொகை குறைந்தாலோ உடனே அபராதம் விதிக்கும் வங்கி, தனது வங்கி ஏடிஎம்மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா?” என கேள்விகளை எழுப்பி எஸ்பிஐ வங்கியை திணறடித்தார்.

மேலும் வாடிக்கையாளர் ஏடிஎம்-ஐ பயன்படுத்துவதற்கான முழு ஆண்டு கட்டணத்தையும் முன்கூட்டியே வங்கிகள் வசூலித்துக் கொள்ளும்போது, எந்த ஒரு ஏடிஎம்மையும் வாடிக்கையாளர் ஒருவர் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதி ‘சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வங்கி 2,500 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS