மாணவிகள் ஆடைகளை களைந்து சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என சோதனை


6 நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவரையில் சானிட்டரி நாப்கின் வீசி எறியப்பட்டதை கண்ட ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுவதும் களையச் சொல்லி சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என சோதனை செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் கிராமத்தின் அரசு பள்ளியில் நடந்த இந்த அராகச் செயலின் வீடியோ பதிவு சமீபத்தில் வெளியானது. இந்த செயலினால் மனமுடைந்த மாணவிகள் அவமானம் தாங்க முடியாமல் அழுதுகொண்டே தங்கள் பெற்றோரிடம் இந்த சம்பவத்தை புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கவனத்துத்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக விசாரனைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்குச் சென்று மாணவிகள் மற்றும் பெற்றோருடன் விசாரணை நடத்தியதில் இரண்டு ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் அந்த இரண்டு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS